
வாஷிங்டன்: அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 11,000 பேரை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை அந்த நிறுவனம் தொடங்கவுள்ளதாக ப்ளூம்பெர்க் பத்திரிகையில் செய்தி வெளியீட்டு உள்ளது. கடந்த 3 மாதங்களில் இந்த நிறுவனம் ஈட்டிய வருமானம் குறித்த அறிக்கை இன்னும் 1 வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
இந்த சூழலில் பொறியலில் பணியாற்றும் 11,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே 2 முறை ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொன்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய பொருளாதார சீரழிவால் பெரும் நிறுவங்களின் செலவை குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்னாப்சேட் நிறுவனம் 1,200 பேரை பணி நீக்கம் செய்தது, அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனம் 3,700 ஊழியர்களை வேலையிழப்பு செய்துள்ளது.
நவம்பர் மாதம் பேஸ்பூக் தாய் நிறுவனமான மெட்டா 11,000 பேரின் பணியை பறித்துள்ளது, டிசம்பர் மாதம் அமேசான் நிறுவனம் 10,000 பேரை ஆட்குறைப்பு செய்தது. சேல்ஸ் போர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு 2023 ஜனவரியில் 8,000 பேரை வீட்டுக்கு அனுப்பியது. இந்த ஆட்குறைப்புகள் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி அதிகரிப்பதை உறுதிப்படுத்தி உள்ளன.