
பொருளாதார மந்தநிலை
உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் மறுசீரமைப்பு குறித்த அச்சம் காரணமாக அனைத்துத் துறை நிறுவனங்களும், மக்களின் செலவினங்களின் அளவு குறையும் என முன்கூட்டியே அறிந்து செலவுகளைக் குறைத்து நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் வளர்ச்சி பாதையை உறுதி செய்யப் பணிநீக்க நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, சீனா
இந்த நிலையில் இந்தியா, அமெரிக்கா, சீனா என வித்தியாசம் இல்லாமல் அனைத்து நாடுகளிலும் பணிநீக்கம் நடைபெறுகிறது. குறிப்பாக அதிகச் செலவு செய்து வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் ஈர்க்கும் அனைத்து நிறுவனங்களும் 2023 ஆம் ஆண்டில் பணிநீக்க நடவடிக்கையை அறிவித்து வருகிறது.

24,000 பேர் பணிநீக்கம்
2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் உலகளவில் சுமார் 91 நிறுவனங்கள் 24,000க்கும் மேற்பட்ட டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன, இது டெக் துறைக்கு மிகவும் மோசமான நாட்களாகப் பார்க்கப்படுகிறது.

Layoffs.fyi நிறுவனம்
Layoffs.fyi நிறுவனம் உலகளவில் சேர்த்த தரவுகள் படி 2022 ஆம் ஆண்டில் 1,000 க்கும் மேற்பட்ட டெக் நிறுவனங்கள் 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. இந்த நிலையில் தற்போது ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் உலகளவில் சுமார் 91 நிறுவனங்கள் 24,000க்கும் மேற்பட்ட டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன.

2022 டூ 2023
மெட்டா, அமேசான், ட்விட்டர், பெட்டர்.காம், அலிபாபா உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. 2023 ஆம் ஆண்டு பெரிய நிறுவனங்கள் பட்டியலில் அமேசான் பிள்ளையார் சுழியைப் போட்டு உள்ளது.

இந்திய நிறுவனங்கள்
உலகில் பிற நாடுகளை ஒப்பிடும் போது இந்திய நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட டெக் ஊழியர்கள் எண்ணிக்கை சற்றுக் குறைவு தான். சமூக ஊடக நிறுவனமான ஷேர்சாட் நிச்சயமற்ற சந்தை நிலைமைகள் காரணமாக அதன் பணியாளர்களுக்கு 20 சதவீதப் பணிநீக்கம் செய்யப்பட்டது, 500 – 600 க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக ஜனவரி 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஓலா, Skit.ai
ஆன்லைன் டாக்ஸி மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான Ola 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. வாய்ஸ் ஆட்டோமேட்டட் ஸ்டார்ட்அப் நிறுவனமான Skit.ai போன்ற நிறுவனங்களும் 10 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன.

Dunzo பணிநீக்கம்
இந்தியாவின் முன்னணி குவிக் காமர்ஸ் வர்த்தகச் சேவை நிறுவனமான Dunzo, செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் வேலையில் தனது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 3 சதவீத பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

அமேசான்
உலகளாவிய ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகளவில் 18,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.