
டெஸ்லா
இந்த நிலையில் தனது உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவில் நேரடியாக டெஸ்லா கார்களை விற்பனை செய்யும் முயற்சியில் எலான் மஸ்க் இருந்தாலும் மத்திய அரசின் கூடுதல் இறக்குமதி வரி இந்தியாவில் தனது கார்களை விற்க முடியாமல் மாட்டிக் கொண்டு உள்ளது.

அழைப்பு
கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் 3 மாநில அரசுகள் தனது மாநிலத்தில் தொழிற்சாலையை அமைக்க அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திடீர் முயற்சிக்கு என்ன காரணம்..?

பிரனாய் பதோல்
எலான் மஸ்க்-ன் நீண்ட கால இந்திய டிவிட்டர் நண்பராக இருக்கும் பிரனாய் பதோல் தனது டிவிட்டரில் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து, எலே எலான் மஸ்க் இந்தியாவுக்கு டெஸ்லா எப்போது வரும் ஏதாவது அப்டேட் இருக்கா..? இந்தச் சிறப்பான கார் உலகின் அனைத்து மூலை முடுக்குகளிலும் இருக்க வேண்டும் என டிவீட் செய்தார்.

எலான் மாஸ்க்
இதற்கு எலான் மஸ்க் அரசு உடன் இருக்கும் சவால்களைச் சரி செய்வதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் எனப் பதில் அளித்தார். இதன் மூலம் டெஸ்லா இந்தியா வருவதற்கான திட்டத்தை இன்னும் கைவிடவில்லை என்பது முழுமையாகத் தெரியும் வேலையில் 3 மாநிலங்கள் அடுத்தடுத்து தனது தொழிற்சாலை அமைக்க அழைப்பு விடுத்தது.

கே.டி ராமா ராவ்
இதில் முதலாவதாக எலான் மாஸ்க் டிவீட் செய்த சில மணிநேரத்திலேயே வெளிநாட்டு நிறுவனங்களை அதிகளவில் ஈர்த்து வரும் தெலுங்கானா மாநில தொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சரான கே.டி ராமா ராவ் டிவிட்டரில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்-ஐ தெலுங்கானாவில் முதலீடு செய்வதைப் பரிசீலிக்க வேண்டும், “இந்தியாவின் சிறந்த வணிகப் பகுதியாக” தெலுங்கானா உள்ளது எனத் தெரிவித்தார்.

தெலுங்கானா
இந்தியா / தெலுங்கானாவில் தொழிற்சாலையை அமைப்பதில் சவால்களைச் சமாளிக்க டெஸ்லாவுடன் இணைந்து பணியாற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் மாநிலம் நிலைத்தன்மை முயற்சிகளில் (sic) ஒரு சாம்பியன் எனக் கேடி ராமா ராவ் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா
தெலுங்கானா அமைச்சரைத் தொடர்ந்து மகாராஷ்டிர அமைச்சர் ஜெயந்த் பாட்டீல், தங்க மாநிலத்தில் டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க எலான் மஸ்க்கை அழைத்தார்.

ஜெயந்த் பாட்டீல்
மஹாராஷ்டிரா இந்தியாவின் மிகவும் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றாகும். நீங்கள் இந்தியாவில் நிறுவுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மகாராஷ்டிரா அரசு சார்பில் வழங்குவோம் ஜனவரி 16 அன்று பாட்டீல் ட்வீட் செய்தார்.

பஞ்சாப்
சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் எலான் மஸ்க் தொழிற்சாலை அமைக்க அழைப்பு விடுத்துள்ளது. பஞ்சாப் மாடல் மூலம் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரித் தொழில்துறைக்கான ஹைப் ஆக லூதியானாவை உருவாக்க உள்ளோம். பஞ்சாபிற்குப் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வரும் முதலீட்டிற்காகவும், முதலீட்டாளர்களுக்காகவும் ஒற்றைச் சாளர அனுமதி வழங்கப்படுகிறது.

பஞ்சாப் மாடல்
மேலும் பஞ்சாப் மாநிலத்தில் பசுமை வேலைவாய்ப்புகளை அதிகமாக ஆர்வத்தைக் காட்டி வருகிறோம் என எலான் மஸ்க்-ஐ பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு
டெஸ்லா இந்தியாவில் நேரடி விற்பனை துவங்குவதற்கான முயற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறது என்பது உறுதியான பின்பு 3 மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரி பிரச்சனைக்காக டெஸ்லா முன்பு வெளியேறிய போது கர்நாடகா, குஜராத், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மாநிலங்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.