
விப்ரோ
ஜனவரி 20 ஆம் தேதி வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து விப்ரோ கொடுத்த விளக்கத்தின் படி நிறுவனத்தின் பணியில் சேர்க்கப்படும் ஆஃபர் லெட்டர் கொடுக்கப்பட்ட நிலையிலும், பணியில் சேர்க்கப்படாமல் இருக்கும் 452 பிரஷ்ஷர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்.

பிரஷ்ஷர்
பொதுவாக ஒரு ஐடி நிறுவனத்தில் பிரஷ்ஷராகப் பணியில் சேரும் போது குறித்த தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுப் பணியில் சேர்க்கப்படுவார்கள். ஐடி நிறுவனங்கள் பயிற்சியில் எந்த அளவுக்கு இந்தப் பிரஷ்ஷர் மாணவர்கள் மேம்பட, திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதைத் தேர்வுகள் வைத்துச் சரி பார்க்கப்படும்.

ஆஃபர் கடிதம்
அப்படி ஆஃபர் லெட்டர் பெற்ற பிரஷ்ஷர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுத் தேர்வுகள் மூலம் ஆய்வு செய்தபோது தொடர்ந்து குறைவான மதிப்பீட்டைப் பெற்று வந்த காரணத்தால் பணியில் சேர்க்கப்படுவதற்கு முன்பே 452 பேருக்கான ஆஃபர் லெட்டர் திரும்பப் பெறப்பட்டு உள்ளது.

விப்ரோ விளக்கம்
விப்ரோ நிறுவனத்தில் பணியில் சேரும் அனைத்து ஊழியர்களும் குறிப்பிட்ட அளவிலான திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் முயற்சியில் ஒரு பகுதி சோதனையில் இந்தப் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விப்ரோ விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

75000 ரூபாய் செலவு
இதேவேளையில் இந்த 452 பிரஷ்ஷர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தலா ஒருவருக்கு 75000 ரூபாய் செலவாகும், இதை விப்ரோ நிர்வாகம் தள்ளுபடி செய்ததாக அறிவித்து 452 பேருக்கு வேலைவாய்ப்பு உதவித் தொகைப் பெறப்பட்டுள்ளது.

டாப் 4 ஐடி சேவை நிறுவனங்கள்
சமீப காலமாகவே இந்தியாவின் டாப் 4 ஐடி சேவை நிறுவனங்களும் பிரஷ்ஷர்களுக்கு அளிக்கப்பட்ட ஆஃபர்களைத் திரும்பப் பெறுவதும், பணியில் சேரும் நாள்-ஐ அறிவிக்காமல் பலமாதங்களாகத் தாமதப்படுத்துவதும் வழக்கமாக இருந்தது. இதில் முக்கியமாகப் பல அனுபவமான ஊழியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

5 வாரம் PRP பயிற்சி திட்டம்
இந்த நிலையில் தற்போது விப்ரோ அதிகாரப்பூர்வமாகப் பிரஷர்கள் செயல்திறன் மதிப்பீட்டைக் கொண்டு பணி நியமனத்தைத் திரும்பப் பெறுகின்றனர். பிரஷ்ஷர்களின் ஆன்போர்டிங் பிரச்சனையைச் சரி செய்யவே விப்ரோ நிர்வாகம் 5 வாரத் திட்டத் தயார்நிலைத் திட்டம் (PRP) திட்டத்தை உருவாக்கியது, இந்தப் பயிற்சி மற்றும் தேர்வு முடிவுகள் அடிப்படையில் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.