
குஜராத்தில் நடைபெற்ற பட்டம் விடும் விழாவில் மாஞ்சா நூல் அறுத்து 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடுவதைப் போல, குஜராத் மாநிலத்தில் உத்ராயண் என்ற பெயரில் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது அனைவரும் பட்டங்களை பறக்கவிட்டு மகிழ்கின்றனர். ஒரே நேரத்தில் பிரமாண்ட பட்டங்கள் பறக்கவிடப்படுவதால், அறுந்து விழுந்த பட்டங்கள் ஆங்காங்கே தொங்குவதாலும், காற்றில் பறந்து வருவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.
விஸ்நகரில் பறந்து வந்த மாஞ்சா நூல், தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த 3 வயது குழந்தையின் கழுத்தை அறுத்ததால், அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதேபோல், நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களின் கழுத்தில் மாஞ்சாநூல் அறுபட்டதால், மேலும் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 176 பேருக்கு கை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: