
வேலைவாய்ப்பு முகாமில் அரசுத்துறையின் பல்வேறு நிறுவனங்களில் புதிதாகச் சேரவிருக்கும் 71,000 பேருக்குப் பணிநியமன ஆணைகளை பிரதமர் இன்று (ஜனவரி 20) மோடி காணொளி காட்சி மூலம் வழங்கினார்.
மத்திய அரசின் துறைகளில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் விதமாக யுபிஎஸ்சி,ஆர்.ஆர்.பி, எஸ்.எஸ்.சி மற்றும் ஐபிபிஎஸ் போன்ற நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு தேர்வாணையங்கள் மூலம் ஒரு வருடத்தில் மத்திய அரசுப் பணிக்கு 10 லட்சம் இளைஞர்களைப் பணி அமர்த்துவதற்கான மத்திய அரசின் திட்டமாக Rozgar Mela செயல்படுகிறது.
இதன் மூலம் மத்திய அரசின் இளநிலைப் பொறியாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள், காவலர், சுருக்கெழுத்தாளர், இளநிலைக் கணக்காளர், கிராமப்புற தபால் ஊழியர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூகப் பாதுகாப்பு அலுவலர், தனிச்செயலர். பல்துறை அலுவலர் மற்றும் பல்வேறு துறைகளில் நாடு தழுவிய அளவில் சென்னை, கோவை, திருச்சி உட்பட 45 இடங்களில் இளைஞர்களுக்கு இன்று பிரதமர் மோடி பணி வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க: ஸ்கூல் பையில் ஆணுறை.. காண்டம் வாங்க 18 வயது நிர்ணயமா? தீயாய் பரவிய செய்தி!
புதிதாக அரசுப் பணியில் சேருபவர்களுக்கு கர்மயோகி பிராம்ப் என்ற திட்டத்தில் ஆன்லைன் மூலம் ஒருங்கிணைப்பு வகுப்புகள் நடைபெறும். இது அவருக்குப் பணி தொடர்பான அனுபவங்களைக் கற்க உதவிகரமாக இருக்கும்.
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த வேலைவாய்ப்பு திருவிழாவானது அரசின் நல்லாட்சியின் அடையாளமாக திகழ்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளதைக் காட்டுகிறது. வரும் மாதங்களில் லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கு அரசு வேலை கிடைக்கும்.வேலைக்கு தேர்வானவர்கள் அனைவரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக பங்களிக்க போகிறீர்கள். எனவே, நீங்கள் அனைவருக்கும் அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: