
நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரே நாளில் சுமார் 71,000 பேர் அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்கள், அமைப்புகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட தேர்வானவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். ரோஸ்கர் மேளாவின் கீழ் இன்று காலை 10.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மோடி பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.

புதிய பணியாளர்கள்
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள் இந்திய அரசின் கீழ் ஜூனியர் இன்ஜினியர்கள், லோகோ பைலட்கள், டெக்னீஷியன்கள், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், ஜூனியர் அக்கவுண்டன்ட், கிராமீன் டக் பாதுகாப்பு அதிகாரி, வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூகப் பிரிவு , மற்றும் பல்வேறு பதவிகளில் சேர உள்ளனர்.

ரோஸ்கர் மேளா
ரோஸ்கர் மேளா என்பது இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு விரைவாக ஆட்களை நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

10 லட்சம் பேர் இலக்கு
10 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தவும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் பிரதமர் மோடி ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தைத் தொடங்கினார். 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இரண்டாவது ரோஜ்கர் மேளாவில், புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு 71,000 நியமனக் கடிதங்களைப் பிரதமர் மோடி வழங்கினார். முதல் ரோஸ்கர் மேளாவில் அவர் 75,000 நியமனக் கடிதங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகள், நிறுவனங்கள் காலியாக இருக்கும் பணியிடங்கள் மூலம் தத்தம் துறையின் பணி இயக்கம் மெதுவாக நடப்பது மட்டும் அல்லாமல் இப்பிரிவின் செயல் திறன் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது, இதனால் அரசுக்கு தான் இழப்பு ஏற்படுகிறது.