
பொதுவாக நிலையான வரும் முதலீடுகளில் ஒன்று NCDகள். இதில் பெறப்படும் பணத்திற்கு நிறுவனங்கள் குறிப்பிட்ட காலம் வரை வட்டி வழங்கும். இந்த வட்டி விகிதம் வங்கி வட்டி விகிதங்களை விட சற்று அதிகமாக இருக்கும். இந்த பணம் பத்திரங்கள் முதிர்வுக்கு பிறகு திரும்ப அளிக்கப்படும். பங்குகளாக மாற்றப்படாது.
இது வங்கி பிக்சட் டெபாசிட்களுக்கு மாற்றாக பார்க்கப்படும் முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும்.
இந்த NCD பத்திரங்களில் பல சாதகமான விஷயங்கள் உள்ளன. குறிப்பாக வட்டி விகிதம் என்பது மற்ற முதலீட்டு திட்டங்களை காட்டிலும் அதிகம். இது வட்டி அதிகம் என்பதோடு பாதுகாப்பான ஒன்றாகும். இதனை பங்கு சந்தைகளில் நீங்கள் விற்றுக் கொள்ளலாம். அதாவது பணமாக மாற்றிக் கொள்ள முடியும். எனினும் பெரியளவிலான லாபத்தினை எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஓரளவு வருமானத்தினை கொடுக்கும் ஒரு திட்டமாகும். வட்டி விகிதம் சற்று அதிகம். அதோடு பாதுகாப்பானது.
இது தவிர, இதில் 15ஜி அல்லது 15ஹெச் பார்ம் கொடுக்கும்போது டிடிஎஸ் கிடையாது. எனினும் இதில் வேறு எந்த வருமான ஆதாரமும் இல்லை எனும் போது 15ஜி பயன்படுத்தலாம். இதற்கு சில நிபந்தனைகள் உண்டு. இந்த பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வரி 10,000 ரூபாய்க்கு மேல் ஒரு நிதியாண்டில் இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் உண்டு.
அவசியம் வாங்க 8 முக்கிய காரணிகள்
1. வட்டி விகிதம் 9% வரையில் கிடைப்பதால் முதலீடு செய்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஏனெனில் வட்டி விகிதம் உச்சத்தில் அல்லது அதற்கு மேல் உள்ளது.
2. வட்டி விகிதம் குறைந்தாலும், முதலீட்டாளர்கள் அடுத்த 2 – 5 ஆண்டுகளில் பாதுகாப்பான பத்திரங்கள் மூலம் 8.5% முதல் 9% வரை வட்டியாகப் பெறலாம். (இதனை கிழே உள்ள அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
3. டிடிஎஸ் என்பது இல்லை. ஆக வரி சலுகையும் கிடைக்கும். 15ஜி மற்றும் 15ஹெச் சமர்ப்பிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது
4. பாதுகாப்பான இந்த NCD பத்திரங்கள் பங்கு சந்தைகளில் பட்டியலிடப்படும். உங்களிடம் பணப்புழக்கம் உள்ளது. அதாவது நீங்கள் இதனை விற்பனை செய்து கொள்ளலாம்.
5. அரசு வங்கிகள் முதல் தனியார் வங்கிகள் வரையில் வங்கி வைப்பு நிதிகளுக்கு 7.5% வரையில் வட்டி விகிதத்தினை வழங்குகின்றது. அதாவது உங்கள் பத்திர காலத்தை பொறுத்து 1.5% வரையில் கூடுதலாக பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு உண்டு.
6. NCD-க்கள் பாதுகாப்பாக உள்ளது. இவை நிறுவனத்தால் ஆதாரிக்கப்படுகிறது. இதனால் இவை பாதுகாப்பானவையாக உள்ளது.
7. கிரிசில் ரேட்டிங்ஸ் வழங்கும் ரெட்டிங்கான CRISIL AA/Stable மற்றும் இக்ரா வழங்கும் AA/Stable ரேட்டிங்குகள் இந்த பாதுகாப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
8.நல்ல வலுவான இருப்பினை கொண்டு மிகப்பெரிய நெட்வொர்க் ஆகும். இதை மேற்கொண்டு NCD-களை பாதுகாப்பானதாகவும், கவர்ச்சிகரமான முதலீடாகவும் மாற்றியுள்ளது.
என்ன முக்கிய விஷயம்?
வெளியீடு தொடக்கம் – ஜனவரி 6, 2023
வெளியீடு முடிவு – ஜனவரி 18, 2023
அடிப்படை வெளியீட்டு மதிப்பு – ரூ.100 கோடி
கீரின் ஷு* – ரூ.900 கோடி
மொத்த வெளியீட்டு அளவு – ரூ.1000 கோடி
ரேட்டிங் – CRISIL AA/Stable & ICRA AA/stable
****மேசை

ஐஐஎஃப்எல் பைனான்ஸ் லிமிடெட் என்பது ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனம். இது பல்வேறு நிதி ரீதியாக கடன் சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக வீட்டுக் கடன், நகைக் கடன், வணிகக் கடன், சொத்துக்களுக்கு எதிரான கடன், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன், மூலதன நிதி சந்தை என பலவும் அடங்கும்.
செப்டம்பர் 30, 2022 நிலவரப்படி நாடு முழுவதும் 3766 கிளைகளைக் கொண்ட ஒரு பெரிய நிறுவனமாகும். இது 32,452 ஊழியர்களைக் கொண்டுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
ஆங்கில சுருக்கம்
IIFL பாதுகாக்கப்பட்ட NCDகளுக்கு நீங்கள் குழுசேர வேண்டிய 8 காரணங்கள்
IIFL பாதுகாக்கப்பட்ட NCDகளுக்கு நீங்கள் குழுசேர வேண்டிய 8 காரணங்கள்
கதை முதலில் வெளியிடப்பட்டது: திங்கள், ஜனவரி 16, 2023, 20:13 [IST]