
எலான் மாஸ்க்
எலான் மாஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய நாளில் இருந்து பல மாற்றங்களை இத்தளம் எதிர்கொண்டு வருகிறது, இந்த நிலையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கு ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் அதாவது ப்ளூ டிக் வெரிபிகேஷன்-ஐ மாதம் 11 டாலர் விலையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அளிக்கப்படுகிறது.

வெப் யூசர்
மேலும் வெப் யூசர்களுக்கு தவணை சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் 84 டாலர் என்ற மலிவான விலையில் கொடுக்கத் தயாராக உள்ளது எலான் மாஸ்க் தலைமையிலான ட்விட்டர் நிர்வாகம்.

முக்கிய நாடுகள்
84 டாலர் என்றால் மாதம் 8 டாலராகும். இந்த தள்ளுபடி விலை திட்டம் முதல்கட்டமாக அமெரிக்கா, கனடா, யுனைடெட் கிண்டம், ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் வெப் யூசர்களுக்கு கிடைக்கும் என்று ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இலவசம்
இந்த ப்ளூ டிக் வெரிபிகேஷன் பேட்ச்-ஐ முன்பு இலவசமாக அரசியல்வாதிகள், செலிபிரிட்டிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிற பிரபலமானவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது 11 டாலர் மாத கட்டணத்துடன் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அளிக்கப்படுகிறது.

அங்கீகாரம்
இது சமூகவலைத்தளத்தில் மக்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தின் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு இத்தளத்தின் விளம்பரதாரர்களிடம் போட்டிப்போட்டு வந்தபோது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சில கோளாறு காரணமாக இத்திட்டம் திரும்ப பெறப்பட்டது.

முயற்சி தோல்வி
2022 அக்டோபர் மாதம் அனைவருக்கும் 8 டாலர் மாத கட்டணத்தில் ப்ளூ டிக் வெரிபிகேஷன் சேவையை வழங்கும்போது பல போலிக் கணக்குகள் நிறுவனங்களின் பெயருடன் உருவாக்கப்பட்ட இலவசம், ஆஃபர் போன்ற பல்வேறு டிவீட்களைச் செய்து பல நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதனால் அடுத்த சில நாட்களில் இந்த அனைவருக்கும் 8 டாலர் மாத கட்டணத்தில் ப்ளூ டிக் வெரிபிகேஷன் திட்டம் திரும்பப் பெறப்பட்டது.

புதிய வெரிபிகேஷன் முறை
அக்டோபர் மாத தோல்விக்குப் பின்பு எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம் இப்புதிய வெரிபிகேஷன் முறையைக் கட்டமைத்தது. இதில் பொதுவான நீல நிற அடையாளத்தை நீக்கிவிட்டு, நிறுவனங்கள், அரசு மற்றும் தனிநபர்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு பல்வேறு வண்ண வெரிபிகேஷ் டிக் பேட்ச்-களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

3 நிறம்
அதாவது நிறுவனங்களுக்குத் தங்க நிறத்தில் பேட்ச்-ம், அரசாங்கத்தைச் சார்ந்த அமைப்புகளின் கணக்கிற்குச் சாம்பல் நிற பேட்ச்-ம், தனிநபர்களுக்கு நீல நிற பேட்ச்-ம் வழங்கப்படுகிறது. முன்பு செலிப்ரிட்டி-களுக்குத் தனியாக ஒரு பேட்ச் அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியானது.
தற்போது நிறுவனங்களுக்கான தங்க நிறத்தில் பேட்ச் வெரிபிகேஷன் முறை துவங்கியுள்ளது.