
செயல்திறன் அடிப்படையில் பணி நீக்கம்
விப்ரோவில் செய்யப்பட்டுள்ள இந்த பணி நீக்கமானது செயல் திறன் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் விப்ரோ நிறுவனம் 8,000 பேரை கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக பணியமர்த்த போவதாக அறிவித்தது.

800 பேர் நீக்கமா?
800 பணியாளர்கள் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையில் ஊழியர்கள் சரியாக செயல்படவில்லை என்றும், அவர்களின் செயல்திறன் மோசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களை நிறுவனத்தை விட்டு வெளியேறும் படி கேட்கப்பட்டதாகவும் தெரிகின்றது.

ரூ.7500 தள்ளுபடி
தகவல் படி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பிய பணி நீக்க கடிதத்தில், ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க நிறுவனம் 75,000 ரூபாயை அளிக்க வேண்டும். ஆனால் நிறுவனம் அதனை தள்ளுபடி செய்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்று பணி நீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாமதமாக சேர்ந்தேன்
இது குறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர், கடந்த ஜனவரி 2022ல் எனக்கு விப்ரோவில் பணிக்கான ஆஃபர் கிடைத்தது. பல மாதங்கள் ஆகியும் பணியில் சேர முடியாமல் வந்த நான், சமீபத்தில் தான் பணியில் சேர்ந்தேன். ஆனால் தற்போது சோதனை என காரணம் கூறி என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டனர் என கூறியுள்ளார்.

இது வசதியான காரணம்
இதே BT-க்கு மற்றொரு நபர் அளித்த பேட்டியில், ஊழியர்களை பணி நீக்கம் செய்ய, அவர்களுக்கு இது வசதி காரணமாக போய்விட்டது என தெரிவித்துள்ளார்.
எனினும் விப்ரோ நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிகரலாபம்
விப்ரோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 3052.90 கோடி ரூபாய் லாபத்தினை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2,969 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் கடந்த டிசம்பர் காலாண்டில் 2.8% அதிகரித்துள்ளது.
நிலையான கரன்சியான கரன்சி மூலம் 11.5 – 12% வளர்ச்சியினை கண்டுள்ளது. எனினும் இது மார்ச் காலாண்டில் குறையலாம் என்றும் எதிர்பார்கப்படுகிறது.

விரைவில் அப்டேட் வரலாம்
விப்ரோ நிறுவனத்தின் இந்த பணி நீக்க நடவடிக்கையானது, சில தினங்களுக்கு முன்பு தான் நிறுவனம் பணியமர்த்தலை அறிவித்த நிலையில் உள்ளது. இது மிகப்பெரிய குழப்பத்தினையும் கேள்வியை எழுப்பியுள்ளது. எப்படியிருப்பினும் இந்த பணியமர்த்தல் குறித்த அறிவிப்பை விப்ரோ அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் விரைவில் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.