
தருமபுரி: தருமபுரி அருகே தடங்கம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை முட்டி காயமடைந்த 14 வயது சிறுவன் கோகுல் உயிரிழந்தான். வாடிவாசல் வழியாக காளைகள் வெளியேறும் இடத்தின் அருகே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தபோது விபரீதம் நேரிட்டது. தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.