
ஹரியானா மாநிலம் குருகிராமில் காவல்துறை வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காரின் மீது மோதியதில் 6 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பரிதாபத் சாலையில் விஸ்வஜித் என்ற நபர் தனது மனைவி, குழந்தைகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு எதிரே ராங் சைட்டில் காவல்துறையின் வாகனம் அதிவேகமாக வந்துள்ளது.
காவல்துறையின் அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விஸ்வஜித் பயணித்த காரில் மோதியுள்ளது. இதில் விஸ்வஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. அதேவேளை, அந்த காவல்துறை வாகனம் நிறுத்தி விபத்துக்குள்ளானவர்களை மீட்காமல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த கோர விபத்தில் விஸ்வஜித்தின் 6 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மற்றவர்கள் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், தங்கள் மீது மோதிய காவல்துறை வாகனத்தில் பயணித்தவர்கள் மீது புகார் அளித்துள்ளார். அவர்கள் வாகனத்தை நிறுத்தி மீட்டுச் சென்றிருந்தால் தங்கள் குழந்தை உயிர் பிழைத்திருப்பாள் என கண்ணீர் மல்க கவலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ் பாணியில் இளைஞர் கழுத்து அறுத்து கொலை.. குடியரசு தின விழாவிற்கு முன் டெல்லியில் பகீர் சம்பவம்
விஸ்வஜித் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை, சம்பந்தப்பட்ட வாகனத்தில் சென்ற 3 காவலர்கள் மற்றும் அந்த ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்தனர். மேலும், இவர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என குருகிராம் ஏசிபி விகாஸ் கவுசிக் உறுதி அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: