
பெங்களூரு: துபாயைச் சேர்ந்த 65 வயது தொழிலதிபர் தன்னிடம் ஒரு கும்பல் ரூ. 2 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு அளித்தனர்.
அப்துல் லஹிர் ஹசன் என்ற தொழிலதிபர் ஒருவர், பிரிகேட் சாலையில் உள்ள காலணி ஷோரூமில் முதலீடு செய்த நான்கு நபர்கள் தன்னை அணுகியதாகவும், அவர்களின் பேச்சை நம்பி முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னிடம் அந்த கும்பல் முதலீடு செய்வது லாபகரமான முயற்சியாக இருக்கும் என உறுதியளித்ததால் தான் அவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபராக கருதப்படும் முகமது ஹபீஸ் என்பவர், 2019ஆம் ஆண்டு நவம்பரில் லஹிர் ஹசனை தொடர்பு கொண்டு ஷோரூமை ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாக அறிமுகப்படுத்தியுள்ளார். ஷோரூமின் உரிமையாளர் உம்ரியன் நபில் என்பவர் அதனை ரூ. 2 கோடிக்கு விற்கத் தயாராக இருப்பதாகவும், ஷோரூமுக்கு ஒவ்வொரு மாதமும் வாடகையாக ரூ. 4 லட்சம் வருவதாகவும் லஹிர் ஹசனை நம்பவைத்துள்ளார். இந்த டீலை உண்மை என நம்பிய ஹசனும் அவரது மனைவியும் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தை சந்தேக நபர்களில் ஒருவரான உமர் ஃபரூக் என்பவரின் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.
பணப்பரிவர்த்தனைக்குப் பிறகு லஹிர் ஹசன் துபாய்க்குத் திரும்பினார். ஆனால் அங்கு சென்ற பின்புதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தான் பணம் கொடுத்து வாங்க நினைத்த ஷோரூம் உம்ரியன் நபிக்கு சொந்தமானது அல்ல என்பதும், தன்னிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பதும் பின்னர் அவருக்கு தெரியவருகிறது. அதன் பின்னர் உடனடியாக ஹபீஸை தொடர்பு கொள்ள முயன்றபோது பதில் கிடைக்காததால், ஹபீஸின் கூட்டாளியான அக்ஷய் தாமஸை ஹசன் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஹபீஸ் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் போலிகளை தயாரித்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, ஹசனின் புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது சைபர் கிரைம் மற்றும் மோசடி வழக்கு பதிவு. தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.