
சனிக்கிழமையும் நேர் காணல்
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விசாவுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணலில், சில சலுகைகளை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. குறிப்பாக முதல் முறையாக விசாவுக்காக காத்திருப்பவர்களுக்கான நேரத்தை குறைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டும் அல்ல சனிக்கிழமையன்றும் கூட சிறப்பு நேர்காணல் முதல் முறையாக தொடங்கப்பட உள்ளது.

நேரத்தை மிச்சப்படுத்த திட்டம்
விண்ணப்பதாரர்கள் டெல்லியில் உள்ள தூதரகம், மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் ஹைத்ராபாத்தில் உள்ள தூதரங்களுக்கும் சென்று விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நேரத்தினை மிச்சப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

தொலைவில் இருந்து பணியாற்றலாம்
முந்தைய அமெரிக்கா விசா கொண்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் இல்லை என்றும், அவர்கள் தொலைவில் இருந்தே செயல்படுத்தலாம் என்றும் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் வாஷிங்டனில் இருந்து பல தற்காலிக தூதரக அதிகாரிகள் செயலாக்கத்தினை அதிகரிக்க இந்தியா வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அதிகரிக்கப்படுவார்கள்
மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை தூதரகம் மற்றும் தூதரகங்களுக்கு நிரந்தரமாக நியமிக்கப்படும், தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க மிஷன் 2.5 லட்சம் கூடுதல் பி1 விசா மற்றும் சுற்றுலா விசாவான பி2 விசாவினையும் தெரிவித்துள்ளது. ஆக இதனை விரைவில் செயலாக்கம் செய்யும் விதமாக அமெரிக்க துணைத் தூதரகம் மும்பை தனது வார நாள் வேலை நேரத்தையும் கூட அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவின் கருத்து
அமெரிக்காவின் இந்த முயற்சியின் மூலம் முந்தைய அளவுக்கு, அமெரிக்க தூதரகம் செயல்படுத்த வாய்ப்புள்ளது.
இந்தக் காலத்தில் இந்தச் செயலாக்க நிகழ்வுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது உலகளவில் பல நாடுகளில் மந்த நிலை இருந்து வரும் நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக இத்தகைய செயல்பாடுகளை அமெரிக்கா தொடங்கியிருக்கலாம்.

பலரும் பலன் பெறலாம்
இது அமெரிக்காவின் தேவையினை ஊக்குவிக்க காரணமாக அமையலாம். பணப்புழக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். மொத்தத்தில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பால், மாணவர்கள், ஊழியர்கள், தொழிலதிபர்கள் என பலரும் பெரும் பலன் பெறுவார்கள். அமெரிக்காவின் அதிரபராக ஜோ பைடன் பதவிக்கு வந்த பிறகு விசா நடைமுறைகளில் பெரும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இது ஐடி ஊழியர்களுக்கு சாதகமாக இருந்தது. எனினும் தற்போது ஐடி ஊழியர்கள் பலன் பெரும் ஹெச்1 பி குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.