
நாட்டில் விலங்குகள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெருவில் நடமாடும் நாய்களை துன்புறுத்தி அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடும் கொடூர சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. அதுபோன்ற வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கிலியால் கட்டப்பட்ட வளர்ப்பு நாயை ஒருவர் சாலையில் தரதரவென இழுத்து செல்லும் வீடியோ தான் அது. ஆனால் இது எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.
இணையத்தில் வெளியான அந்த வீடியோ பீகார் மாநிலம் கயாவில் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோவில் பைக்கில் சங்கிலியால் கட்டப்பட்ட நாயை அந்த நபர் இழுத்து செல்கிறார். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து அந்த நபரை தடுத்து நிறுத்தி உள்ளார். நாயை இழுத்து சென்றது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, இது என்னுடைய வளர்ப்பு நாய் தான். நடைபயிற்சிக்கு அழைத்து வந்த போது நடக்க மறுத்தது. அதனால் இழுத்து சென்றதாகவும் பைக்கை மெதுவாக ஒட்டியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் நாயை சாலையில் இழுத்த செயலுக்காக எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.
⚠️ எச்சரிக்கை: கோர் / மரணம் ⚠️
பீகார்: காலை நடைபயிற்சிக்கு செல்ல செல்ல நாய் தயாராக இல்லாததால், கயாவில் அதன் உரிமையாளர் நாயை பைக்கின் பின்னால் 2 கி.மீ., இழுத்துச் சென்றுள்ளார்.
நாய் உயிருடன் உள்ளது, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பைக் எண்: BR-2C-6732 pic.twitter.com/nslxE4fXEJ
— அனில் ரமேஷ் வால்மீகி 🚩JCB🚩 (@AnilRameshValmi) ஜனவரி 18, 2023
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கயா எஸ்எஸ்பி இது தொடர்பாக கூறியது, நாயை இழுத்து சென்ற வீடியோ வெளியானதை தொடர்ந்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வண்டியின் நம்பர் பிளேட் அடிப்படையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். சம்மந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு இது தொடர்பாக புகார் அனுப்பப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: