
நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபுராவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு பாஜகவின் மாணிக்க சாகா முதலமைச்சராக உள்ளார். இந்த மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், தேர்தல் ஆணையம் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியாகின்றன.
2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 25ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை தோற்கடித்து முதல் முறையாக பாஜக ஆட்சியில் அமர்ந்தது. இந்நிலையில், இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க முதலமைச்சர் மாணிக்க சாகா தேர்தல் பரப்புரை பணியை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க வெற்றி யூகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழைய ஓய்வூதிய திட்டத்தை கையிலெடுத்துள்ளது. திரிபுராவில் 1.04 லட்சம் அரசு ஊழியர்களும், 80,000 அரசு ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் என்ற தேர்தல் வாக்குறுதி சமீப காலமாகவே பல மாநிலங்களில் மீண்டும் முன்வைக்கப்படுகின்றன. நடந்து முடிந்த இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை அளித்தது. அக்கட்சியின் தேர்தல் வெற்றிக்கு இந்த வாக்குறுதி முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திலேயே இமாச்சலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது. தற்போது அதே யுக்தியை இடதுசாரிகளும் திரிபுராவில் கையிலெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஷாருக்கான் யார் எனக் கேட்ட முதலமைச்சர்.. நள்ளிரவு வந்த அந்த பொன் கால்..
தற்போது காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், இமாச்சல் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டங்கள் அமலில் உள்ளன. ஆம் மாநில ஆத்மி ஆளும் பஞ்சாபையும் சேர்த்து 4 பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது. பாஜக கூட்டணியான ஏக்நாத் ஷிண்டே அரசும் மகாராஷ்டிராவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர பரிசீலித்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: