
குரங்கு குல்லா
குளிர்காலத்தில் நமது பெற்றோர்கள் இந்தக் குரங்கு குல்லா -வை அணிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தும் தருணம் அனைவருக்கும் நடந்திருக்கும். குளிர்காலம் வந்துவிட்டாலே வீட்டின் அலமாரியில் இருக்கும் குரங்கு குல்லா, ஸ்வெட்டர் ஆகியவை வெளியில் வந்துவிடும்.

100 ரூபாய்
இந்தக் குரங்கு குல்லா பொதுவாகவே தலை, காது, கழுத்து மற்றும் வாய் என அனைத்தையும் மூடிக்கொண்டு குளிர்ந்த காற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். இவை இந்தியா முழுவதும் எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒன்றாகவும் 50 – 100 ரூபாய் என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யக் கூடியதாகவும் உள்ளது.

டோல்சே & கபனா – 40,000 ரூபாய் விலை
இந்தக் குரங்கு குல்லா தற்போதைய டிரெண்டில் இல்லை என்று சிலர் நினைத்தாலும், இத்தாலி நாட்டின் ஆடம்பர பேஷன் நிறுவனமான டோல்சே & கபனா சுமார் 40,000 ரூபாய் விலையில் காக்கி நிற மங்கி கேப்பைக் விற்பனைக்கு வந்தது.

பனிச்சறுக்கு விளையாட்டு
நமக்கு இது மங்கி கேப் ஆக இருந்தாலும், டோல்சே & கபனா பிராண்ட் இதைப் பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஸ்கை விளையாட்டில் பயன்படுத்தக்கூடிய ஒரு லைப்ஸ்டைல் பொருட்களைப் பார்க்கிறது. டோல்சே & கபனா இதை ஸ்கி மாஸ் கேப் ஆக விற்பனை செய்கிறது.

ஸ்கி மாஸ் கேப்
இந்த நிலையில் ஸ்வாதி என்பவர் தனது ட்வீட்டில், இந்த ஸ்கி மாஸ் கேப்-ன் ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்துள்ளார். இதன் அசல் விலை 40,000 ரூபாய் ஆனால் தள்ளுபடி விலை 31,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Balenciaga பிராண்டு
சமீபத்தில் ஆடம்பர பேஷன் பிராண்டான Balenciaga 2022 ஆகஸ்ட் மாதம் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான கார்பேஜ் பேக் வடிவிலான ஒரு பேக்-ஐ அறிமுகம் செய்யப்பட்டது. Balenciaga நிறுவனம் இந்தப் பேக்-க்கு Trash Pouch என பெயரிட்டு பேஷன் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

குப்பை பை விலை
தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த Balenciaga பிராண்டின் Trash Pouch விலை 1790 அமெரிக்க டாலர், இது இந்திய ரூபாய் மதிப்பில் 1.4 லட்சம் கோடி ரூபாய். இந்தப் பேக் அச்சுஅசல் கார்பேஜ் பேக் போலவே இருக்க வேண்டும் என்பதற்காக நீலம், கருப்பு, வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது Balenciaga நிறுவனம்.