
இந்தூர்: இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் குட்காவை துப்ப வேண்டி விமானத்தின் ஜன்னல் கதவை திறக்குமாறு பணிப்பெண்ணிடம் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உண்மைய நாட்களாக விமானத்தில் பயணிகள் கொடுக்கும் இம்சைகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இது அனைத்தும் ‘ச்’ என முகம் சுளிக்க வைத்த நிலையில் தற்போது பரவி வரும் வீடியோ காண்போரை புன்னகை பூக்க செய்துள்ளது. இந்த வீடியோ தமிழ் திரைப்படத்தில் வரும் விமானப் பயண காமெடி காட்சியை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
“எக்ஸ்கியூஸ் மீ. ஜன்னலை திறக்க முடியுமா? குட்கா துப்ப வேண்டும்” என அந்தப் பயணி இந்தி மொழியில் விமானப் பணிப்பெண்களிடம் கேட்கிறார். இதனை கேட்டு அந்த பணிப்பெண் உட்பட சக பயணிகளும் குபீர் என சிரிக்கின்றனர். இது வீடியோவாக படம் பிடிக்கப்பட்டது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் சேகரித்தனர்.
இதை செய்தது கன்டென்ட் கிரியேட்டரான கோவிந்த் சர்மா எனத் தெரிகிறது. மத்திய மாநில பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த அவர் இந்த வீடியோவை பார்ப்பவர்களிடம் அவர்களது குட்கா விரும்பி நண்பர்களை டேக் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
இதை அவர் வேடிக்கையாக செய்திருந்தாலும் வரும் நாட்களில் விமானத்தில் இது மாதிரியான காட்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. ஏனெனில். இந்த வீடியோவை பார்க்கும் போது கடந்த ஆண்டு விமானத்திற்குள் பயணி ஒருவர் ஜன்னல் ஓர இருக்கைக்கு அருகே குட்காவை மென்று துப்பி விட்டு சென்ற கரையை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தது நினைவுக்கு வருகிறது.