
தங்கம் விலை உச்சம்
கடந்த 2020ல் 2069.89 டாலர்களை எட்டிய நிலையில், நடப்பு ஆண்டில் மீண்டும் அந்த உச்சத்தினை எட்டலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தொடர்ந்து அதிகளவிலான விகிதம், பத்திர சந்தை என பல காரணிகளுக்கு மத்தியில், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மேலும் டாலரின் மதிப்பு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.

எதிர்பார்ப்பு
தொடர்ந்து டாலரின் மதிப்பு உச்சமானது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெசசன் அச்சம்
தொடர்ந்து பணவீக்க விகிதமானது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

முக்கிய லெவல்
எப்படியிருப்பினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையானது மீடியம் டெர்மில் 1870 – 1900 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை மேற்கொண்டு சரிவினைக் கண்டால், 1800 டாலர்களை கூட எட்டலாம். அதனையும் உடைத்தால் 1730 டாலர்களை எட்டலாம். எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் தங்கம்

காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்சூக்கு 6.65 டாலர்கள் குறைந்து, 1915.05 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை சற்று குறையலாம் எனும் வகையில்வே காணப்படுகின்றது. ஆக நீண்டகால முதலீட்டாளர்கள் சற்று குறையும்போது வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்சூக்கு காலையில் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது சற்று அதிகரித்து, 24.392 டாலராகக் காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்றும் மேலாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே டெக்னிக்கலாகக் காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது சற்று குறைந்து, 56,463 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 31 ரூபாய் அதிகரித்து, 69,817 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரணம் தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமத்திற்கு 12 ரூபாய் குறைந்து, 5305 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, 42,440 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இது வரவிருக்கும் நாட்களில் மேலும் குறையலாம் என்றே எதிர்பார்க்கலாம்.

தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமத்திற்கு 13 ரூபாய் குறைந்து, 5787 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதே 10 கிராமுக்கு 104 ரூபாய் குறைந்து, 57,870 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. இது கிராமத்திற்கு 50 பைசா குறைந்து, 75.30 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 75,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: கிரேனியம் தகவல் தொழில்நுட்பங்கள், கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல. Tamil.Goodreturns.in பயனர்கள் ஏதேனும் முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் நிபுணர்களுடன் சரிபார்க்க அறிவுறுத்துகிறது.