
புதிய டிரெண்ட் ரேஜ் விண்ணப்பிக்கிறது
இந்த நிலையில் ஊழியர்கள் பணிபுரிய விரும்பும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரும் ராஜினாமா, அமைதியான விலகல் ஆகியவற்றைத் தாண்டி தற்போது வேலைவாய்ப்பு சந்தையில் Rage Applying என்பது புதிய டிரெண்டாகி வருகிறது.

பெரும் ராஜினாமா காலம்
2021 இல் இருந்து வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்த போது Great Resignation காலம் உருவானது. சந்தையில் திடீரென அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவான காரணத்தால், ஊழியர்களுக்கான டிமாண்ட் உச்சம் தொடும் அனைத்து நிறுவனங்களிலும் வேலையை ராஜினாமா செய்து புதிய நிறுவனத்தில், கூடுதல் சம்பளத்தில் ஊழியர்கள் சேர்ந்தனர்.

Quiet Quitting காலச்சாரம்
இதே நேரத்தில் தான் உலகம் முழுவதும் Quiet Quitting காலச்சாரம் அனைத்து துறையிலும், அனைத்து மட்டத்திலும் உருவானது. ஒரு நிறுவனத்தில் வேலையை ராஜினாமா செய்ய முடியாத நிலையில், அதிகப்படியான டார்கெட், வேலைச் சுமையை ஏற்றுக்கொள்ள முடியாத விருப்பம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக மனநிலை தான் அமைதியான விலகல்.

வளர்ச்சி
அத்தகைய ஊழியர்களால் நிறுவனத்திற்கு நஷ்டம் இல்லையென்றாலும் வளர்ச்சி இருக்காது, அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது. இந்த அமைதியான மனநிலையை விட்டுவிடுவது குறைவான சம்பள உயர்வு அல்லது எதிர்பார்த்த பதவி உயர்வு, அங்கிகாரம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் ஊழியர்கள் மத்தியில் உருவாகிறது.

Rage Applying – புதிய டிரெண்ட்
இந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு சந்தையில் Rage Applying என்ற புதிய டிரெண்ட் உருவாகியுள்ளதாக பார்ச்சூன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா முதல் அமெரிக்கா வரை உள்ள நிறுவனங்களுக்கு பெரும் தலைவலி உருவாகியுள்ளது.

Rage Applying என்றால் என்ன..?
Rage Applying என்பது ஒரு ஊழியர் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் மனநிறைவு கிடைக்காத நிலையில், கிடைக்கும் அனைத்து வேலைவாய்ப்புகளுக்கு அப்ளை செய்வது தான். இந்த கலாச்சாரம் தற்போது அதிகரித்துள்ளதாக பார்சூன் ஆய்வு கூறுகிறது.

இக்காலச்சரம் உருவாக்க என்ன காரணம்..?
தற்போது செய்யும் வேலையில் முற்றிலும் சோர்வடைந்த நிலையிலும், வேலைக்குச் சரியான பாராட்டு கிடைக்காத நிலையிலும் வேறு தேடல் துவங்கும் நிலை உருவாகும், ஆனால் Rage Applying காலாச்சாரம் உருவாக்க முக்கிய காரணம் தற்போது பணியில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்பதற்காக செய்யப்படுபவை.

பிரபலம்
கனடா நாட்டை சேர்ந்த Redweez என்பவரின் வீடியோ மூலம் இந்த Rage Applying காலாச்சாரம் சமுக வலைதளத்தில் பிரபலமானது. இந்த வீடியோவில் Redweez என்னுடைய வேலை மிகவும் கடுப்பேற்றியதால், நான் புதிய வேலைவாய்ப்புக்காக Rage Apply செய்ய துவங்கினேன்.

2500 டாலர் சம்பள உயர்வு
கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளுக்கு அப்ளை செய்தேன். தற்போது 25000 டாலர் சம்பள உயர்வுடன் புதிய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, தற்போது பணியாற்றி வரும் நிறுவனம் மிகவும் சிறப்பான நிறுவனம். எனவே வேலை பிடிக்கவில்லை எனில் Rage Apply செய்யுங்கள் கட்டாயம் நடக்கும் என தெரிவித்தார்.