
பணிநீக்கம்
இந்திய ஸ்டார்ட்அப் மற்றும் டெக் சந்தையில் பணிநீக்கம் 2022 ஆம் ஆண்டு முடியும் என நினைத்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டு கூடுதல் பணிநீக்க அறிவிப்புகள் புத்தாண்டு துவங்கி முதல் 15 நாட்களுக்குள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று 3 நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

டன்சோ நிறுவனம்
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கி வரும் டன்சோ தனது மொத்த ஊழியர்களிடம் சுமார் 3 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் டன்சோ மளிகை பொருட்கள் மற்றும் இதர முக்கிய வர்த்தகத்தில் அதிகப்படியான செலவுகளைக் குறைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ShareChat பணிநீக்கம்
ShareChat மற்றும் Moj ஆகிய தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech சிஐஓ-வான அங்குஷ் சச்தேவா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி டிசம்பர் மாத பணிநீக்கத்தைத் தொடர்ந்து தற்போது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதம் ஊழியர்கள் சுமார் 500 – 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Rebel Foods பணிநீக்கம்
பெரு நகரங்களில் அசத்தி வரும் கான்சப்ட் ஆக விளங்கும் கிளவுட் கிட்சன் பிரிவு நிறுவனமான Rebel Foods பணிநீக்கத்தை தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் தான் Behrouz Biryani, Oven Story, போன்ற பல பிராண்டுகளை வைத்து இந்தியாவின் பல பெரு நகரங்களில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் Rebel Foods நிறுவனமும் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Skit.ai பணிநீக்கம்
கடந்த வாரம் SaaS ஸ்டார்ட்அப் நிறுவனமான Skit.ai சுமார் 115 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டது. இந்தப் பணிநீக்கத்தில் பிஸ்னஸ் ஆய்வாளர், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், பிராடெக்ட் ஆப்ரேஷன்ஸ், சிஎஸ்எம் அணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. Skit.ai நிறுவனம் இப்போது அமெரிக்கப் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்துவதால், பணிநீக்கங்கள் இந்திய அணியைப் பாதித்தன.

EDTECH நிறுவனங்கள்
கடந்த ஆண்டு EDTECH நிறுவனங்கள் தான் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு கன்ஸ்யூமர் டெக் நிறுவனங்கள் அனைத்தும் பணிநீக்கம் செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டு இதுவரையில் ஓலா, பணமில்லா, Moglix ஆகியவை பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

சிறிய ஸ்டார்ட்அப்
இதேபோல் புதிய வர்த்தகம், வாடிக்கையாளர்கள், வருமானம், லாபத்தை ஈட்ட முடியாத அனைத்து சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தற்போது புதிய முதலீட்டை ஈர்க்க முடியாமல் மாட்டிக்கொண்டு வருகின்றன. இதனால் இந்த சிறிய மற்றும் நிதி ஆதாரம் அதிகமாக இல்லாத அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தற்போது பணிநீக்கம் செய்து வருகின்றன.