
புனே: மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டம் கணேஷ்பூர் கிராமத்தில் 150 பேர் வசிக்கும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3ம் வகுப்பு மாணவர் ஒருவர் மட்டுமே படித்து வருகிறார். அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கி.மீ. பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருகிறார். காலை வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர்.
அதன்பின்னர் வகுப்பு தொடங்கும். இதுபற்றி ஆசிரியர் கிஷோர் மங்கார் கூறுகிறார், ‘கடந்த 2 ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். பள்ளியில் நான் மட்டுமே ஆசிரியராக பணியாற்றுகிறேன். இந்த மாணவருக்கு அனைத்து பாடங்களையும் கற்றுத் தருகிறேன். அரசால் வழங்கப்படும் மதிய உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அந்த மாணவருக்கு வழங்கப்படும்’ என்று கூறினார்.