
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சேலை, கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து விலைமதிப்புமிக்க சேலைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஏராளமான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக 11,344 சேலைகள், 750 காலணிகள், 1040 வீடியோ கேசட்கள் என பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணை கர்நாடகத்தில் நடைபெற்றதால், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன.
நீதிபதி உத்தரவு
இந்நிலையில், அந்த பொருட்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம், அரசு வழக்கறிஞரை நியமனம், ஜெயலலிதாவின் உடைமைகளை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: