
தெலங்கானாவில் தன்னை கடவுளாக கருதி கட்டிய கோவிலை நடிகர் சோனு சூட் நேரில் சென்று பார்த்தார்.
தெலுங்கானா மாநிலம் சித்தி பேட்டை மாவட்டம் துல்மிட்டா மண்டலம் செல்மிதாண்டா ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் நடிகர் சோனு சூட்டிற்கு கோயில் ஒன்றை கட்டி அதில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கரோனா காலத்தில் அவர் பொதுமக்களுக்கு செய்த உதவிகளுக்காக அங்கு அவருக்கு கோவில் கட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சித்தி பேட்டை வந்த சோனு சூட்டுக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துடன் அவரை அழைத்து சென்றனர்.
இன்று காலை அவர் செல்மிதாண்டா கிராமத்திற்கு வந்தார். அவரை அன்புடன் வரவேற்ற கிராம மக்கள் சோனு சூட் கோவிலுக்கு சோனு சூட்டை அழைத்து சென்றனர். தன் மீது இருக்கும் அன்பு காரணமாக கிராம மக்கள் தனக்கு கட்டிய கோவிலை பார்த்து அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் பொதுமக்களுடன் பேசிய அவர், நான் கடவுள் அல்ல. உங்களை போல் நானும் ஒரு மனிதன். இந்த கிராமத்திற்கு எந்த விதமான உதவிகள் தேவை என்றாலும் செய்ய கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு நன்றி என்று கூறி அங்கிருந்து விடைபெற்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.