
வின்டர் கேஷ்வல் : மேலே நீங்கள் பார்க்கும் இந்த வின்டர் ஸ்டைல் லுக்கில் நடிகை சோனம் கபூர், ஒரு அழகான பிங்க் ஹை-நெக் டீ-யை (high-neck tee ) அணிந்திருக்கிறார். ஆனால் இந்த ஹை-நெக் டீ முழுவதும் வெளியே தெரியா வண்ணம் ஒரு டீப் கலர் டெனிம் ஜாக்கெட்டை மேலே அணிந்து இருக்கிறார். இவற்றுக்கு மேட்ச்-ஆக கீழே சில்வர் ப்ளீட்டட் ஸ்கர்ட் அணிந்து கையில் அழகான மலர் கொத்துடன் அழகாக புன்னகைத்தபடி ஸ்டைலாக இருக்கிறார். அழகான மற்றும் அம்சமான ஒரு ஜோடி பென்சில்-ஹீல் கொண்ட சிவப்பு பூட்ஸை அணிந்து அம்சமாக காட்சியளிக்கும் சோனம் கபூரின் கையில், அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் ஸ்கை ப்ளூ கலர் ஹேண்ட்பேக் இருக்கிறது. இவரது இந்த வின்டர் ஸ்டைல் லுக் பல ரசிகர்களை வாவ் சொல்ல வைத்து இருக்கிறது.