
அஜய் தேவகன்
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜய் தேவ்கன். மேலும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார் அஜய் தேவ்கன். எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் வெங்கட ராம ராஜு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் அஜய் தேவ்கன். பிரபல பாலிவுட் நடிகையான கஜோலின் கணவர் அஜய் தேவ்கன்.
Bayilvan Ranganathan: விஜய் மீது அவதூறு பரப்புவது ஏன்? யார்? பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு தகவல்!
கைதியின் ரீமேக்

தற்போது அஜய் தேவ்கன், பாலிவுட்டில் போலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி அப்ளாஸை குவித்த கைதி படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரிமேக் ஆகும். இந்தப் படத்தை அஜய் தேவ்கனே இயக்கி நடிக்கிறார். இதில் பாலிவுட் நடிகையான தபு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அஜய் தேவ்கன், சிறைக் கைதியாக நடித்துள்ளதாக தெரிகிறது.
அமீர், பவானி ரெட்டி: என்னது அமரும் பாவனிக்கும் இந்த தேதியில் திருமணமா? தீயாய் பரவும் தகவல்!
டீசர் வெளியீடு

மேலும் இப்படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் தபுவுடன் சஞ்சய் மிஸ்ரா, தீபக் டோப்ரியால், ராய் லட்சுமி மற்றும் மக்ரந்த் தேஷ்பாண்டே ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். போலா திரைப்படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் முதல் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் இரண்டாவது டீசர் சமீபத்தில் வெளியானது.
Rashmika Mandanna: அவரோட டூர் போனதில் என்ன தப்பு? நடிகை ராஷ்மிகா மந்தனா ஆவேசம்!
த்ரில்லர் ட்ரீட்

டீசர் வெளியிட்டு விழா அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகை தபு, படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான அஜய் தேவ்கன் உட்பட படக்குழுவினர் பலர் நடித்துள்ளனர். அப்போது பேசிய தபுவும், அஜய்யும் போல திரைப்படம் நிச்சயம் ஒரு த்ரில்லர் ட்ரீட்டாக இருக்கும் என்று கூறினார். மேலும் இருவரும் மேடையில் இருந்தபடியே பார்வையாளர்களுடன் உரையாடினர்.
மீனா: மீனா இப்போ எப்படி இருக்கார் பாருங்க… லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
நடிகருக்கு முத்தம்

அப்போது நடிகை தபு திடீரென நடிகர் அஜய் தேவ்கனை இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அஜய்க்கு தபு முத்தம் கொடுத்த போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அஜய் தேவ்கனுக்கு நடிகை தபு முத்தம் கொடுப்பதை பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் இடையே நல்ல நட்பு மீண்டும் ஒரு முறை வெளியிடப்பட்டுள்ளது என கூறி வருகின்றனர்.
51 வயது

51 வயதான நடிகை தபு இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக கோலொச்சி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை தபு தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர், காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Azeem: அடடே… அசீம் இவ்வளவு நல்லவரா? என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
அஜய் தேவ்கன்
