
எது எவ்வளவு சரிவு?
இது 17.75 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 17.20 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 5.35% சரிவினைக் கண்டு, 720 ரூபாயாகவும், அதானி வில்மர் பங்கு விலையானது 4% சரிவினைக் கண்டும், அதானி டொட்டல் கேஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் விலையானது 3% சரிவினைக் கண்டும் காணக்கூடியதாக உள்ளது.

சந்தை மதிப்பு
இதே அதானி எண்டர்பிரைசஸ் 2.5% சரிவினைக் கண்டும், அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது 1.5% சரிவினைக் கண்டும் காணப்படுகின்றது.
இதில் அதானி டோட்டல் கேஸின் சந்தை மதிப்பானது 13,800 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, அதனை தொடர்ந்து அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 10,167 கோடி ரூபாயாகவும் சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி எண்டர்பிரைசஸ் 9604 கோடி ரூபாயும், அதானி போர்ட்ஸ் 8791 கோடி ரூபாயும் சரிவினைக் கண்டுள்ளது.

கடன் அழுத்தம்
அதானி குழும நிறுவனங்களின் கடன் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் நிறுவனம் கடன் பெறுவதற்காகவும் சில பங்குகளை பிணையமாக வைத்தும் கடன் பெற்றுள்ளது. இது முழு குழுமத்திற்கும் ஆபத்தான நிதி நிலைக்கு தள்ளுகிறது என்றும் எச்சரித்துள்ளது.

உரிமை பங்கு வெளியீடு
அதானியின் தலைமை நிதி அதிகாரியான ஜுகேஷிந்தர் சிங் ஜனவரி 21, அன்று, எங்களிடம் கடன் குறித்து யாரும் கேள்வி எழுப்பியதில்லை. எந்தவொரு முதலீட்டாளரும் கேட்டதில்லை என கூறியதாக செய்திகள் வெளியானது.
இதற்கிடையில் அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் அதன் உரிமை பங்கு வெளியீட்டை செய்யவுள்ளது. இதன் மூலம் 2.5 பில்லியன் டாலர் நிதியினை திரட்டவுள்ளது.

வலுவான அதானி குழும வளர்ச்சி
இது அதானி குழுமத்தின் வலுவான வளர்ச்சிக்கு முன்னதாக இப்படி ஒரு உரிமை பங்கு வெளியீடானது செய்யவுள்ளது. இது ஒரு மிகப்பெரிய மூலதன திட்டமிடலாகும். இது பெரியளவில் பிரச்சனை இல்லாத ஒரு வளர்ச்சித் திட்டத்தால் ஆதரிக்கப்படலாம். இது வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.

எச்சரிக்கை அறிவிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அதானி குழுமத்தின் கடன் விகிதமானது அதிகரித்துள்ளது. மேலும் அதானி குழுமம் அதிகளவிலான கடனை வாங்கி வருகின்றது என ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
சமீபத்திய காலமாக நிறுவனம் தொடர்ந்து அதிகளவிலான முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. பல புதிய வணிகங்களில் நுழைந்து வருகிறது என எச்சரிக்கை விடுத்தது. இது சந்தை முதலீட்டாளர்களையும், சந்தை ஆய்வாளர்களுக்கும் மத்தியில் அப்[போதேபெரும்கவலையைஏற்படுத்தியதுஅந்தஅறிவிப்புவெளியானநிலையில்அந்தசமயத்தில்அதானிகுழுமபங்குகள்பலத்தசரிவினைக்கண்டதுநினைவுகூறத்தக்கது[போதேபெரும்கவலையைஏற்படுத்தியதுஅந்தஅறிவிப்புவெளியானநிலையில்அந்தசமயமத்தில்அதானிகுழுமபங்குகள்பலத்தசரிவினைக்கண்டதுநினைவுகூறத்தக்கது