
டெல்லி: பங்குகளின் விலை கடும் சரிவால் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 2 நாட்களில் ரூ.2.37 லட்சம் கோடி சரிந்தது. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிந்து வருகிறது. ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த பிறகு அதானி குழும நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிகிறது. அதானி குழும நிறுவன பங்குகளின் விலை அதிகபட்சமாக 20 சதவீதம் வரை சரிந்துள்ளது.