
Sani peyarchi palan 2023: நீதிக் கடவுளான சனி ஜனவரி 17 மாலை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தார். கும்ப ராசியில் சனி நுழைவதால் சிலர் ஏழரை வருட சனியில் இருந்தும், சிலர் இரண்டரை வருட சனியின் பிடியில் இருந்தும் விடுபடுவார்கள். சனியின் நிலை மாறுவதால் உங்க ராசி பலன் எப்படி இருக்கும் என இங்கே பார்க்கலாம்.
ஜோதிடத்தில், சனியின் ராசி மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஜனவரி 17 ஆம் தேதி மாலை 6:02 மணிக்கு பிரதோஷ காலத்தில் சனி தனது மூலத்திரிகோண கும்ப ராசிக்குள் நுழைகிறார். கும்பத்தில் சனியின் சஞ்சாரம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி மீண்டும் மகர ராசியில் சஞ்சரிப்பார். சனியின் இந்த ராசி மாற்றத்தால் தனுசு ராசிக்கு ஏழரை ஆண்டுகள் நிறைவடையும். ஆனால், அடுத்த ஏழரை வருடங்கள் மீன ராசிக்காரர்கள் சாதே சதி சுழற்சியில் இருப்பார்கள். சனி பகவான் கும்ப ராசியில் நுழைவதால், உங்கள் ராசிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
சொந்த வீட்டிற்கு இனம்பெயரும் சனி : சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்திற்கு இடம்பெயர்கிறார். சனி பெயர்ச்சியானது சனியின் பெயர்ச்சி 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். சனி பெயர்ச்சியின் போது, 3, 5,6, 9, 10, 11 ஆகிய வீடுகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாத சனி என மூன்று பலன்களை கொடுப்பார். அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி போன்றவற்றால் கஷ்டம் கொடுத்தாலும், கடைசியில் நல்ல பலன்களை கொடுப்பார்.
மேஷம் – லாப சனி காலம் : இந்த சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்கு நல்ல பலன்களை கொடுக்கும். சனி பெயர்ச்சியால், தொழிலில் லாபம், அபரிமிதமான வருமானமும் மற்றும் பணவரவும் ஏற்படும். சனிபகவானின் பார்வை உங்கள் ராசியில் நேரடியாக விழுவதால், கூடுதல் பலம் கிடைப்பதுடன் செல்வம் பெருகும். வெளிநாடு செல்வதற்கான யோகம் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். மேஷத்தில் இருந்து பதினொன்றாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால், நீங்கள் நினைத்தது நிறைவேறும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்கான பலன் கிடைக்கும்.
ரிஷபம் – சச யோகம் நடக்கும் : ரிஷப ராசியினருக்கு சனியின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பதவி உயர்வு வாய்ப்புகளும் கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கும் நல்ல யோகம் கிடைக்கும். மேஷத்தில் இருந்து 10 ஆம் தேதி வீடான தொழில் ஸ்தானத்திற்கு சனி பெயர்வதால், நல்ல வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். அதிக பணிச்சுமையை உணர்ந்தாலும், உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. சமூகத்தில் கவுரவம் மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வரர் ஆவதற்கு நல்ல யோகம் ஏற்படும்.
மிதுனம் – தர்ம சனி காலம் : மிதுன ராசிக்கு கும்ப சனியின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். அஷ்டம சனியால் அவதிப்படும் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். ஏனெனில், சனி உங்களின் அதிஷ்ட வீடான லாப தானத்திற்கு பெயர்வதால் வாழ்க்கையில் வெற்றி மற்றும் நிதி சம்மந்தமாக லாபம் கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல் சம்மந்தமான பதவிகள் தேடிவரும். ஜோதிடம் மற்றும் தத்துவம் ஆகியவற்றுடன் தொடர்ந்து பணிகளை செய்பவர்களுக்கு சனி நன்மைகளை செய்வார். மேலும், அவர்களின் அறிவையும் கௌரவத்தையும் அதிகரிக்கும். சொத்து சம்மந்தமான சில சிரமங்களை அனுபவிப்பீர்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம் – அஷ்டம சனி காலம் :கடகத்தில் சனி இதுவரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களை ஏற்படுத்தினார். இந்நிலையில், சனி கடகத்தில் ஒன்பதாம் வீடான லாப தனத்திற்கு நகர்வதால், கடக்க ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நிலைமையை பெறுவார்கள். இருப்பினும் சனியின் இந்த சஞ்சாரம் உங்களுக்கு கலவையான பலன்களை கொடுக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம், சனியின் வெள்ளிப் பிரசன்னத்தால் உங்களுக்கு நிதி ஆதாயம் பெருகும். பயணம் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. 11 ஆம் வீட்டின் ராசி அதிபதி சனி பெயர்ச்சி விபரீத ராஜயோக காலமாகும். எனவே, பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும்.
சிம்மம் – கண்டச்சனி காலம் துவக்கம் : கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் சிம்ம ராசிக்கு கலவையான பலன்களைத் தரும். உங்கள் பங்குதாரர் நிறைய முன்னேற்றம் அடைவார். இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இவர் செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை அதிகரிப்பார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வீட்டை விட்டு தூரமாக பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வீடு வாங்க விரும்புவோருக்கு இந்த சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
கன்னி – ராஜயோக காலம் : கும்ப சனியின் பெயர்ச்சியால், கன்னி ராசிக்காரர்களுக்கு பழைய கடன்கள் தீரும். இதுமட்டுமின்றி, நீண்ட நாளாக தீராத நோயை எதிர்த்து போராடுபவர்கள், நோயிலிருந்து விடுபடுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். அதே போல, நீண்ட நாட்களாக இருந்த சச்சரவுகள் நீங்கி வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். இருப்பினும், குழந்தைகளின் விஷயத்தில் சனி உங்களுக்கு சற்று கவலை அளிக்கலாம்.
துலாம் – ஏற்றம் தரும் சனி : கும்ப சனி பெயர்ச்சி உங்களுக்கு பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. அர்த்தாஷ்டம சனியால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்து உங்களுக்கு விடிவுகாலம் பிறக்க போகிறது. சனியின் பார்வை 9 ஆம் தேதி தொழில் ஸ்தானத்தில் விழுவதால், துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். உங்களின் வருமானம் நன்றாக இருக்கும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலான உறவுகள் நன்றாக இருக்கும். குறிப்பாக, தமிழகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மொத்தத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.
விருச்சிகம் – அர்த்தாஷ்டம சனி காலம் : கும்பத்தில் சனியின் சஞ்சாரம் விருச்சிக ராசிக்கு நான்காம் வீட்டில் நிகழ்கிறது. இதன் காரணமாக, நீங்கள் பதவி உயர்வு மற்றும் சிறப்பு அதிகாரத்தையும் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள். இதனால், நீங்கள் நிறைய ஓட வேண்டி இருக்கும். இருப்பினும், சனி பகவான் உங்களுக்கு செல்வத்தின் மகிழ்ச்சியை கொடுப்பார். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களின் ஆசைகள் மற்றும் குறிக்கோள்களை சனிபகவான் நிறைவேற்றுவார். திடீர் வருமானத்தை அனுபவிக்க தயாராக இருங்கள்.
தனுசு – ஏழரை சனி முடிவு : கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் தனுசு ராசியினருக்கு நல்ல பலனைத் தரும். ஏழரை சனி உங்கள் ராசியை விட்டு வெளியேறுவதால் , உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவரை நீங்கள் சந்தித்த இன்னல்கள் மற்றும் சிக்கல்கள் நீங்கி வெற்றியை காணப்போகிறீர்கள். நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் நடைபெறும். சனி உங்களின் மூன்றாவது வீட்டில் சஞ்சரிப்பதால், தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இனி நீங்கள் லாபத்தை மட்டுமே காணப்போகிறீர்கள்.
மகரம் – பாத சனி காலம் : ஏழரை சனியில் மகர ராசிக்காரர்களை பிடித்திருந்த ஜென்ம சனி விலகுகிறது. இந்நிலையில், சனி பகவான் பாத சனியாக உங்கள் ராசிக்கு வரப்போகிறார். எனவே, உங்களுக்கு எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சனிபகவான் உங்களை அதிலிருந்து தூக்கி விடுவார். பாத சனி இரண்டு ஆண்டுகள் இருப்பதால் சற்று கவனமாக இருப்பது நல்லது. நிதி மற்றும் முதலீட்டு விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். கஷ்டங்களை சந்திக்க கொஞ்சம் மனதளவில் திடமாக இருப்பது நல்லது.
கும்பம் – ஜென்ம சனி காலம் : சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகள் கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி காலம். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது சொந்த ராசியில் சஞ்சரித்துள்ளார். இந்த சஞ்சாரத்தால், தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, சொத்து உங்கள் கைக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றமும், புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும்.
மீனம் – ஏழரை சனி காலம் : மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனியின் காலம். எனவே, மீன ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை கொடுக்க உள்ளார். ஏழரை சனி தொடங்கினாலும் மீன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சஞ்சாரம் சாதகமான பலன்களை கொடுக்கும். இருப்பினும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும், உங்கள் செலவு அதிகரித்து, வருமானம் குறையும். கடுமையான பணிச்சுமையை அனுபவிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், இது உங்கள் செலவை அதிகரிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: