
தெலுங்கில் காமெடி நடிகராக இருந்துவந்த சுனில், ராஜமௌலி இயக்கத்தில் மரியாத ராமண்ணா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். காமெடியன், ஹீரோ கலக்கிக் கொண்டிருந்தவர் கடந்த வருடம் வெளியான புஷ்பா படத்தில் வில்லனாகவும் மிரட்டினார்.
இந்திய அளவில் புஷ்பா படத்துக்கு கிடைத்த வெற்றி, அவரையும் இந்திய அளவில் பிரபமாக்கியிருக்கிறது. பல்வேறு மொழி படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கும் சுனில் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெய்லர் படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் சுனில் நடிக்கவிருப்பதாக தகவல்.
இந்த நிலையில் விஷாலின் நடிப்பில் பான் இந்தியன் படமாக உருவாகிவரும் மார்க் ஆண்டனி படத்திலும் சுனில் நடிக்கிறார். இதனை தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வரவேற்பதில் மகிழ்ச்சி #சுனில் Gaaru போர்டில் #மார்க் ஆண்டனி 😎🔥👌🏼 pic.twitter.com/TZsiEDeAb9
— விஷால் (@VishalKOfficial) ஜனவரி 21, 2023
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார். மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.