
அமேசான் முதலிடம்
இது குறித்து பிராண்ட் பைனான்ஸ் அறிக்கையானது, குலோபல் 500 2023 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை தான் அமேசான் நிறுவனம் மீண்டும் முதலிடத்தை எட்டியுள்ளது. அதன் பிராண்ட் மதிப்பானது நடப்பு ஆண்டில் 50 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. எனினும் இது மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

அமேசான் மீதான ரேட்டிங்
அமேசானி மீதான ரேட்டிங் விகிதமானது AAA+ல் இருந்து,AAA ஆக குறைந்துள்ளது. இது மிகவும் பெருந்தொற்றுக்கு பிறகு தேவையான பெரும் சரிவினைக் கண்ட நிலையில், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் விற்பனை சரியலாம். வளர்ச்சி குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அமேசான்
அமேசான் வாடிக்கையாளர் சேவை குறைந்துள்ளது. அதேசமயம் டெலிவரி நேரமானது என்று பிராண்ட் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர் அமேசானை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்வது குறைந்துள்ளது. அதோடு லாக்டவுன் கட்டுபாடும் நீக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்ய திரும்புகின்றனர். இது ஆன்லைன் சில்லறை விற்பனையில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

ஆப்பிள் 2வது இடம்
அமேசானை தொடர்ந்து இரண்டாவது இடம் பிடித்துள்ள பிராண்ட் ஆப்பிள். இதன் மதிப்பு 16% குறைந்து, 297.5 பில்லியன் டாலராக உள்ளது. இது முன்னதாக 355.1 பில்லியன் டாலராக இருந்தது. இதற்கிடையில் தான் உலகின் சிறந்த இரண்டாவது பிராண்டாக அமேசான் வளர்ச்சி கண்டுள்ளது. இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான மத்தியில் சப்ளை சங்கிலியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

50ல் 48 பிராண்டுகள்
கடந்த ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற 50 டெக் பிராண்டுகளில், நடப்பு ஆண்டில் 48 டெக் பிராண்டுகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஸ்னாப்சாட் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளன.
சாம்சங் குழுமத்தின் மதிப்பானது 7% குறைந்தது, 99. 7 பில்லியன் டாலராகவும், இதே அலிபாபா.காமின் மதிப்பானது 56% குறைந்துள்ளது, 10.0 பில்லியன் டாலராகவும், இதே பேஸ்புக்கின் மதிப்பு 42% குறைந்துள்ளது, 59 பில்லியன் டாலராகவும், வீசாட்டின் மதிப்பானது 19% குறைந்து 50.2 பில்லியன் டாலராகவும் உள்ளது.

மதிப்பு அதிகரிப்பு
பெரும்பாலான நிறுவனங்களின் மதிப்பு குறைந்த நிலையில் , சில நிறுவனங்களின் மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் இன்ஸ்டாகிராம் மதிப்பு 42% அதிகரித்து, 47.4 பில்லியன் டாலராகவும், லிங்க் இன் மதிப்பு 49% அதிகரித்து, 15.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.
இதில் மின்சார கார் உற்பத்தியாளரான டெஸ்லாவின் மதிப்பு, 44% அதிகரித்து, 66.2 பில்லியன் டாலராகவும், BYD மதிப்பு 57% அதிகரித்து, 10.1 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து மின்சார கார்களுக்கு தேவையானது அதிகரித்து வரும் சூழலில் அதிகரிப்பினை கண்டுள்ளது எனலாம்.

இந்திய நிறுவனங்கள்
இந்தியாவில் உள்ள டாடா குழுமத்தின் பிராண்ட் மதிப்பு தரவரிசை பட்டியலில், கடந்த ஆண்டு, 78ல் இருந்து, 69 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதில் இந்திய ஐடி நிறுவனங்களில் இன்ஃபோசிஸ் கடந்த ஆண்டு 158 ஆவது இடத்தில் இருந்து, 150-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 84% அதிகரிப்பைக் கண்டுள்ளது.