
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக த.மா.கா. தலைவர் வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பென்சமின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா சார்பில் யுவராஜ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.