
ஏர் இந்தியா
ஜனவரி 21 முதல் ஜனவரி 23 வரையிலான பிப்ரவரி 1 முதல் செப்டம்பர் 30, 2023 வரையிலான பயணங்களுக்குத் தள்ளுபடி விலையில் விமான டிக்கெட் புக் செய்ய முடியும்.

கட்டணம்
நம்பமுடியாத அளவிற்கு குறைந்த விலை ஒரு வழி பயணத்திற்கு, கட்டணமாக 1,705 ரூபாயில் இருந்து 49 உள்நாட்டுப் பகுதிகளுக்குப் பயணம் செய்யத் தள்ளுபடி விலையில் டிக்கெட் புக் செய்துகொள்ள முடியும்.

டூர்
நீங்கள் குடும்பத்துடன் டிரீம் டூர் செல்ல வேண்டும் என்றாலோ அல்லது பிஸ்னஸ் டிரிப் செல்ல வேண்டும் என்றாலோ இந்தியாவின் பரந்த உள்நாட்டு நெட்வொர்க்கில் இந்த கூடுதல் தள்ளுபடி டிக்கெட்டுகளைப் பெறலாம் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

விலை விபரம்
ஒரு வழி தள்ளுபடி கட்டணங்களில் சில (அனைத்தையும் உள்ளடக்கியது):
டெல்லி டூ மும்பை – 5,075 ரூபாய்
சென்னை டூ டெல்லி – 5,895 ரூபாய்
பெங்களூரு டூ மும்பை – 2,319 ரூபாய்
டெல்லி டூ உதய்பூர்- 3,680 ரூபாய்
டெல்லி டூ கோவா – 5,656 ரூபாய்
டெல்லி டூ போர்ட் பிளேயர் – 8,690 ரூபாய்
டெல்லி டூ ஸ்ரீநகர் – 3,730 ரூபாய்
அகமதாபாத் டூ மும்பை – 1,806 ரூபாய்
கோவா டூ மும்பை – 2,830 ரூபாய்
திமாபூர் டூ கவுகாத்தி – ரூ 1,783 ரூபாய்

ஏர் இந்தியா கைப்பற்றல்
கடந்த ஆண்டு துவக்கத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரு பிராண்டுகள் மற்றும் மொத்த சொத்துக்களையும் டாடா குழுமம் கைப்பற்றியது. அக்டோபர் 2021 இல் டாடா குழுமம் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவைக் கைப்பற்றுவதற்கான ஏலத்தில் வெற்றி பெற்றது.

18000 கோடி ரூபாய் டீல்
இந்த ஏலத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து டாடா சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு மொத்தமாக வாங்கியது.இதில் ரூ.2,700 கோடி ரொக்கமாகச் செலுத்தப்பட்டது மற்றும் ரூ.15,300 கோடி மதிப்புள்ள கேரியரின் கடனை ஏற்றுக்கொண்டது.

லாபம்
2022 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏர் இந்தியாவைக் கையகப்படுத்தியதிலிருந்து, நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை மீட்டெடுப்பதற்கான விரிவான மாற்றத் திட்டம் டாடா அறிமுகம் செய்யப்பட்டது.

ஐந்து காரணிகள்
இந்தத் திட்டம் ஐந்து காரணிகளில் கவனம் செலுத்துகிறது – தொழில்துறை தலைமை, வலுவான செயல்பாடுகள், வணிகச் செயல்திறன், தொழில்துறையின் சிறந்த திறமை மற்றும் விதிவிலக்கான வாடிக்கையாளர் அனுபவம். இதன் மூலம் நீண்ட நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமிடுகிறது.

இணைப்பு
மார்ச் 2024க்குள் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைக்கும் என நவம்பர் மாதம் ஏர் இந்தியா நிர்வாகக் குழு அறிவித்தது. இணைப்புச் செயல்முறை முடிந்தது, டாடா குழுமம் AI-Vistara – AI Express – AirAsia India Pvt Ltd (AAIPL) கூட்டு நிறுவனத்தில் 97.9 சதவீத பங்குகளை வைத்திருக்கும். இந்த ஒருங்கிணைப்பு முடிந்த உடன் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ்250 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.