
500 புதிய விமானம்
இந்த நிலையில் ஏர் இந்தியா நிர்வாகம் மீண்டும் தனது வளர்ச்சி திட்டங்களின் மீது கவனத்தைச் செலுத்த துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியா புதிய விமானங்களை வாங்குவதற்கான ஆர்டரை உறுதி செய்துள்ளது.

டாடா குழுமம்
டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஏர் இந்தியா நிர்வாகம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் அதிக எண்ணிக்கையில், அதிக வழித்தடத்திலும் சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக புதிதாக விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.

ஏர் இந்தியா
மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியாவைக் கைப்பற்றி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் ஏர் இந்திய தலைவர் கேம்ப்பெல் வில்சன் கடந்த 12 மாதங்களில் ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னேற்றம் பிரமிக்க வைக்கும் அளவில் உள்ளது.

முதல் ஆண்டு
டாடா குழுமம் ஏர் இந்தியாவைக் கையகப்படுத்தி முதல் ஆண்டை நிறைவு செய்யும் வேலையில் இன்னும் நிறைய விஷயங்கள் இந்தியாவில் உள்ளது எனக் கேம்ப்பெல் வில்சன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

எதிர்கால வளர்ச்சி
கடந்த ஒரு வருடத்தில் ஏர் இந்தியாவில் எடுக்கப்பட்ட முயற்சிகள், முக்கியப் பகுதியாக ஏர் இந்தியா தனது எதிர்கால வளர்ச்சிக்காக வரலாற்று ரீதியாக காணாத வகையில் புதிய விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளது எனக் கேம்ப்பெல் வில்சன் தெரிவித்தார்.

495 போயிங் ஜெட்
இதைத் தொடர்ந்து விமானத் தயாரிப்பு நிறுவனங்களான போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகியவற்றுடன் பல நாடுகளாகப் பேசி வருகிறது. இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா தப்போடு பல பில்லியன் டாலர் மதிப்பிலான 495 போயிங் ஜெட், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் சிஎஃப்எம் இண்டர்நேஷ்னல் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இன்ஜின் ஆகியவற்றைப் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டது.

போயிங் நிறுவனம்
ஏர் இந்தியாவைக் கைப்பற்றி ஒரு வருடம் முழுமையாக முடிந்த நிலையில் டாடா குரூப் போயிங் நிறுவனத்திடம் இருந்து 190 737மேக்ஸ் விமானங்கள், 20 787விமானங்கள், 10 777எக்ஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர்பஸ் விமான நிறுவனம்
இதுமட்டும் அல்லாமல் அடுத்த கட்ட திட்டத்திற்கு ஏர்பஸ் விமானத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 235 சிங்கிள் அசைல் ஜெட்ஸ், 40 ஈ350 வைட்பாடி விமானங்களை வாங்குவது குறித்து அடுத்த சில நாட்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இன்று கையெழுத்து
இதில் முதல் கட்டமாக ஏர் இந்தியா இன்று போயிங், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் CFM இண்டர்நேஷ்னல் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.