
இது ரசிகர்களின் பொறுமையை சோதிக்க படம் எதிர்பார்த்த வெற்றியையும் பெறவில்லை. எனவே துணிவு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர் படக்குழுவினர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆக்ஷன் திரில்லர் படமாக இருந்தாலும் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை இப்படம் பேசியுள்ளதால் பொதுவான ரசிகர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துணிவு வெற்றியை அஜித் கொண்டாடவில்லை என்ற தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
அதாவது துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது ரசிகர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். துணிவு படத்தின் கொண்டாட்டத்தின் போது அந்த ரசிகர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதன் காரணமாக அப்சட்டில் இருந்த அஜித் துணிவு வெற்றியை கொண்டாடவில்லை. ரசிகர்கள் இவ்வாறு செய்வதை ஒருபோதும் விரும்பாத அஜித் இதன் காரணமாகத்தான் தன் ரசிகர் மன்றங்களை களைத்தார். இருப்பினும் இதுபோன்ற செயல்கள் தொடர்வதால் அவர் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.