
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கடந்த 11 ஆம் தேதி வெளியான இந்தப் படம் உலகளவில் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. துணிவில் முதல் பாதி முழுக்கவும் அஜித் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாகவும், இரண்டாம் பாதி வங்கி சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ‘துணிவு’ படம் ஹிட்டடித்துள்ளதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
அஜித்தின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் ‘துணிவு’ ரிலீசுக்கு முன்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு அஜித்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.
Thalapathy 67: ‘தளபதி 67’ படத்தில் சீயான் விக்ரம்.?: லோகேஷ் சொன்ன செம்ம மாஸ் தகவல்.!
இதன் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் இருந்து துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘ஏகே 62’ படத்தை தொடர்ந்து அஜித்தின் நடிக்கவுள்ள படத்திற்கு அட்லி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாகவும், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் வட்டமடித்து வருகின்றன.
Rajinikanth: எப்படி இதெல்லாம் சாப்பிடுறாங்க.. சிகரெட், மது அளவே இல்லை: ரஜினி ஓபன் டாக்.!
தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த விஜய்யின் பேவரைட் இயக்குனராக இருப்பவர் அட்லி. விஜய்யின் தம்பி என கூறப்படும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். இவர் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தீயாய் பரவி வருகிறது. அட்லி விஜய்யின் 68வது படத்தை இயக்குவதாகவும் தெரியவந்துள்ளது. அட்லி தற்போது ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.