
வங்கியில் கொள்ளை முயற்சி
இதனை தொடர்ந்து குடும்பத்தினர் தன்னை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு துணிவு படம் பார்க்க சென்றதால் மனமுடைந்த 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் துணிவு படத்தால் இன்ஸ்பையராகி இளைஞர் ஒருவர் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் வங்கியில் நுழைந்த அந்த இளைஞர், ஊழியர்கள் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து, கட்டிப் போட்டுவிட்டு கொள்ளையடிக்க முயன்றார்.
Kamal Haasan: பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடிகளா?
துணிவு படத்தை பார்த்து…

பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடிக்கப்பட்ட அந்த இளைஞர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் திண்டுக்கல்லில் பூச்சி நாயகன் பட்டி பகுதியை சேர்ந்த அணியில் ரகுமான் என்பது தெரியவந்தது. மேலும் வாழ்க்கையில் ஏற்பட்ட விரட்டியால் துணிவு படம் பார்த்துவிட்டு கொள்ளையடிக்கும் முயற்சயில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணிவு படம் வெளியானது முதல் அடுத்தடுத்து அஜித்தின் பெயர் டேமேஜ்ஜாகி வருவது அவரது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.