
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஊடகம் டாக்குமெண்டரி ஒன்றை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் மகனான அணில் ஆண்டனி பிரதமர் மோடிக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டார்.
அவர் நேற்று தனது ட்விட்டர் பதிவில், “பாஜகவுடன் எனக்கு பெரிய அளவில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், இந்தியர்கள் பிபிசி கருத்துகளை முன்வைப்பது ஏற்கத் தக்கது அல்ல. அந்நாட்டு அரசு ஸ்பான்சர் நடத்தும் ஊடகமான பிபிசி, நீண்டகாலமாகவே இந்தியாவுக்கு எதிரான எண்ணத்துடன் செயல்படுகிறது.
அணில் ஆண்டனி காங்கிரஸ் கட்சியின் மாநில டிஜிட்டல் ஊடக ஒருங்கிணைப்பாளர், தேசிய சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகிப்பவர். இவர் பிபிசி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்த விவாதத்தை கிளப்பிய நிலையில், இன்று அடுத்த பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார் ஆண்டனி.
நான் எனது பாத்திரங்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன் @incindia @INCKerala.சுதந்திரமான பேச்சுரிமைக்காகப் போராடுபவர்களால், ஒரு ட்வீட்டை திரும்பப் பெறுவதற்கு சகிப்புத்தன்மையற்ற அழைப்புகள்.நான் மறுத்துவிட்டேன். @முகநூல் அன்பை ஊக்குவிப்பதற்காக மலையேற்றத்தை ஆதரிப்பவர்களால் வெறுப்பு/துஷ்பிரயோகம்! பாசாங்குத்தனம் உன் பெயர்! வாழ்க்கை தொடர்கிறது. திருத்தப்பட்ட ராஜினாமா கடிதம் கீழே. pic.twitter.com/0i8QpNIoXW
– அனில் கே ஆண்டனி (@anilkantony) ஜனவரி 25, 2023
அப்பதிவில் அணியில் ஆண்டனி, “எனது முந்தைய பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் தொலைப்பேசி அழைப்புகள் மூலம் வசைபடுகின்றனர், ட்வீட்டை நீக்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர். வழிநடத்திய கேரளா காங்கிரஸ் தலைமை, சசி தரூர் உள்ளிட்ட பலருக்கும் நன்றி” என அணில் ஆண்டனி கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.