
கந்தர் ஆய்வு
இந்திய யூனியன் பட்ஜெட் குறித்த கணக்கெடுப்பின் இரண்டாவது பதிப்பில், காந்தார் வருமான வரி தொடர்பான கொள்கை மாற்றங்களை இந்த பட்ஜெட்டில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. நான்கில் மூன்று பேர் பணவீக்கம் அதிகரித்து வருவதைப் பற்றி அதிகப்படியாக கவலைப்படுவதாக கூறப்படுவது இதன் மூலம் உறுதி செய்ய முடிகிறது.

வருமான வரி விலக்கு
அதிலும் குறிப்பாக அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை தற்போதைய அளவான 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது. இல்லையெனில் 80சி பிரிவு அளவை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது 2வது கோரிக்கையாக இருக்க வேண்டும்.

80சி பிரிவு
பட்ஜெட் வெளியிட சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது வரை சந்தை நிலவரத்தின் படி அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது, 80சி பிரிவின் சலுகையை விரிவாக்கம் செய்வதோ சாத்தியமில்லை.

தனிநபர் வருமான வரி
ஆனால் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது, இதன் மூலம் புதிய வருமான வரி விதிப்பு முறையில் கூடுதலாக வரி பலகை சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் பட்ஜெட் தாக்கல் செய்யும் பிப்ரவரி 1 ஆம் தேதி தான் உறுதி செய்ய முடியும்.

மேக்ரோஎக்னாமிக்
மேலும் Kantar நிறுவனத்தின் ஆய்வின் படி மேக்ரோஎக்னாமிக் அளவில், பெரும்பாலானவர்கள் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து பாசிடிவான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். 2023 இல் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று 50 சதவீதம் பேர் நம்புகிறார்கள். மேலும் வெறும் 31 சதவீதம் பேர் மட்டுமே மந்த நிலைக்கு செல்லும் என நம்புகின்றனர்.

பொருளாதார மந்தநிலை
இருப்பினும், உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் இத்தொற்றின் எண்ணிக்கை உயர்வு ஆகியவற்றின் தாக்கம் பெரிய அளவில் இருப்பதால், இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெரும் தடையாக மாறலாம். இதேவேளையில் இந்தியா ரெசிஷன் நேரடியாக பாதிக்காத மறைமுகவாகவே பாதிக்கும்.

பணவீக்கம்
இதோடு கந்தர் ஆய்வில் நான்கில் மூன்று பேர் அதிகரித்து வரும் பணவீக்கத்தைப் பற்றி அதிகம் கவலைப்படும் நிலையில் அதைச் சமாளிக்க மத்திய அரசு கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்றும் ஆய்வில் பங்கு பெற வேண்டும்.