
பிரபல சின்னத்திரை நடிகை ஆலியா மானஸா கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது அவரே ஒரு வீடியோவை பதிவிட்டு காயத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த கபடி போட்டியில் ஆல்யா மானசா கலந்து கொண்டார். சிங்கப்பெண்கள் அணியில் இடம் பெற்று இருந்ததால் அவர் கபடி விளையாடிக்கொண்டிருக்கும் போது தான் அவருக்கு காயம் ஏற்பட்டது என்றும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அவர் பதிவு செய்த வீடியோவில் இருந்து தெரிய வந்தது.
இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விரைவில் அவர் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த கபடி விளையாட்டு ஒரு மாதத்திற்கு முன் நடந்ததாகவும் அதனால்தான் கால் முறிவு ஏற்பட்டதாகவும் ஆல்யா தெரிவித்துள்ளார். மேலும் அவர் சுமார் ஒரு மாத காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.
நடிகை ஆல்யா மானஸா குழந்தை பெற்ற பின், தற்போது தான் ‘இனியா’ என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்த நிலையில் திடீரென அவருக்கு காயம் ஏற்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.