
வருவாய் விகிதம்
மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 22,998 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 19,347 கோடி ரூபாயாக இருந்தது. இது வரலாறு காணாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள நிலையில் 18.87% அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதே செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவன வருவாய் விகிதமானது 22,521 கோடி ரூபாயாக இருந்தது.

செயல்பாட்டு மார்ஜின்
இதன் செயல்பாட்டு மார்ஜின் விகிதமானது டிசம்பர் காலாண்டில் 26.6% அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் காலாண்டில் 26.3% ஆக இருந்தது. இதே கடந்த ஆண்டில் 26.1% ஆக இருந்தது. இதே நிகர லாப மார்ஜின் விகிதமானது டிசம்பர் காலாண்டில் 17.1% ஆகவும், இது செப்டம்பர் காலாண்டில் 17% ஆகவும், கடந்த ஆண்டு 26.1% ஆகவும் இருந்தது.

5ஜி விரிவாக்கம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து தனது 5ஜி சேவையினை பல்வேறு நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து வருகிறது. அதன் வயர்லெஸ் சேவையினையும் விரிவாக்கம் செய்து வருகின்றது. இதற்கிடையில் அதன் வளர்ச்சி விகிதம் வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோவின் நெட்வொர்த்
ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் சேவை வழங்கும் ஜியோ நிறுவனம், இதன் நெட்வோர்ட் டிசம்பர் காலாண்டில் 2,11,281 கோடி ரூபாயாகும். செப்டம்பர் காலாண்டில் 2,06,644 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஆண்டில் 1,93,616 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மொத்த சொத்து விகிதத்தில் கடன் விகிதம் 0.08% ஆகும்.

ஜியோவின் 5ஜி விரிவாக்க திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் 5ஜி சேவையினை 16 நகரங்களில் வெளியிடுவதாக இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆந்திரபிரதேசத்தில் காக்கிநாடா, கர்னூலிலும், அசாமில் சில்சாரிலும், கர்நாடகா மாநிலத்தில் தாவணகெரே, ஷிவமொக்கா, பிடார், ஹோஸ்பேட், கடக் – பேட்டகேரி, மலப்புரம், பாலக்காடு, கோட்டயம் உள்ளிட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக அறிமுகம்
கண்ணூர் (கேரளா), திருப்பூர் (தமிழ் நாடு), நிஜாமாபாத், கம்மம் (தெலுங்கானா), பரேலி (உத்திரபிரதேசம்) உள்ளிட்ட நகரங்களில், பெரும்பாலானவற்றில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.

உலகத் தரம் வாய்ந்த சேவை
ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளார்ட்பார்ம்ஸ் லிமிடெட், உலகத் தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்காக நெட்வொர்க்கினை விரிவாக்கம் செய்து வருகிறது. இது 6ஜி தொழில் நுட்ப வசதிகளை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு மேம்படுத்தும் அளவுக்கு, மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.