
வாஷிங்டன்: இந்த ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர் போனி கேப்ரியல் கைப்பற்றி அசத்தினார். அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது மிஸ்யூனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் ஆர் போனி கேப்ரியல் இந்த ஆண்டிற்கான மிஸ்யூனிவர்ஸ் அழகி பட்டத்தை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் மொத்தம் 86க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டனர். வெனிசுலாவின் டயானா சில்வா 2வது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா 3வது இடத்தையும் பிடித்தனர். இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக கர்நாடகாவை சேர்ந்த திவிதா பங்கேற்றார். அவர் 16வது இடத்தை பிடித்தார். டொமினிக்கன் குடியரசு, குராக்கோ, போர்ட்டோரிக்கோ, வெனிசுலா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த அழகிகளே முதல் 5 இடங்களை பிடித்தனர். தாய்லாந்து அழகி அன்னா சுயங்கம் தலைமை பண்பிற்கான விருது பெற்றார்.