
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வாழ்க்கையை அளிக்கக்கூடிய செயற்கை கணையத்தின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். குளுக்கோஸ் மானிட்டர் மற்றும் இன்சுலின் பம்ப் இணைக்கப்பட்ட ஒரு செயலி மூலம் அது இயக்கப்படுகிறது
நீரிழிவு நோயின் சுமை உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 77 மில்லியன் நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற மதிப்பீடுகள் காட்டப்படுகின்றன. இது 2045 ஆம் ஆண்டில் 134 மில்லியனுக்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் நோய் தீவிரத்தின் காரணமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள வெல்கம்-எம்ஆர்சி இன்ஸ்டிடியூட் ஆப் மெட்டபாலிக் சயின்ஸின் ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமான குளுக்கோஸ் அளவை பராமரிக்க செயற்கை கணையத்தை உருவாக்கியுள்ளனர்.
டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பலர் இன்சுலின் ஊசி போன்ற சிகிச்சைகளைப் பயன்படுத்தி தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த போராடுகிறார்கள். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைத்துக்கொள்ள ஒரு புதிய யுக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
CamAPS HX எனப்படும். இந்த செயலி மூலம் தான் செயற்கை கணையம் இயங்கும்.
மேலும் முதற்கட்ட மனித சோதனையில் செயற்கை கணையம் கிளைகேட்டட் ஹீமோகுளோபின் அல்லது HbA1c எனப்படும் மூலக்கூறின் அளவைக் குறைக்க உதவியது. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் குளுக்கோஸுடன் சேரும்போது உருவாகிறது. இதனால் நோயாளிகள் உடலில் குளுக்கோஸ் அளவு சரியான நிலையில் பராமரிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
இறுதி கட்ட ஆய்வுகள் முடிந்த பின்னர் இது மக்களின் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இது சாதாரணமாக வீட்டிலேயே பயன்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.