
முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு விரைவில் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருடன் திருமணம் நடக்கவுள்ள நிலையில் நேற்று இருவருக்கும் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள்தான் ராதிகா மெர்ச்சன்ட். கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள அந்நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த லெஹங்கா அனைவரையும் கவர்ந்துள்ளது.
பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா ராதிகாவின் லெஹங்காவை வடிவமைத்துள்ளார். வண்ணங்கள் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கலர்ஃபுல் நிறத்தில் அந்த ஆடையை வடிவமைத்திருந்ததே அதன் தனித்துவம்.
டிசைனர் சந்தீப் கோஸ்லே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஆடை வடிவமைப்பு குறித்து அவரே பகிர்ந்துகொண்ட பதிவில் “ பல வண்ணங்கள் நிறைந்த ரேஷம் லெஹங்கா ராதிகாவுக்கு மிகவும் பொருத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வண்ணங்கள் நிறைந்த பூக்களின் தொகுப்புகளுடன் எம்பராய்டர் செய்யப்பட்டுள்ளது. அதோடு ஜொலிக்கும் மிரர் ஒர்க்குகளும் அந்த லெஹங்காவுக்கு கூடுதல் அழகு” என்று குறிப்பிட்டுள்ளார். மெஹந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் , வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். அதில் ராதிகா ஆலியாபட்டின் கலன்க் படத்திலிருந்து ’கர் மோர் பர்தேசியா’ என்ற பாடலுக்கு நடமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ராதிகாவின் ஆடை வடிவமைப்பில், கண்கவர் பிங்க் நிறத்தில் பல வண்ணங்கள் நிறைந்த பூக்களின் எம்பராய்டரி தொகுப்பு கொண்ட அந்த ஆடையை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அணிந்து சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்கிற ஆசையை தூண்டும். குறிப்பாக அதன் மிரர் வேலைபாடுகள் மெஹந்தி நிகழ்சிக்கு பக்கா பொருத்தமான டிசைன். பட்டி பார்டர் டிசைன் அந்த லெஹங்காவுக்கு கூடுதல் சிறப்பு. அரை நீள ஸ்லீவ் கொண்ட கிராப் மேலாடை நல்ல காம்பினேஷன் என்றே சொல்லலாம். அதற்கு மேட்சிங்காக லெஹங்கா ஸ்கர்ட் , லேயர் வைத்த ஏ-லைன் சில்அவுட் டிசைனரின் தனித்துவத்தை மேம்படுத்திக் காட்டுகிறது. இடுப்புப்பகுதியில் முடி போடுவதற்காக நிறைந்த டசல் வேலைபாடுகள் வைத்திருப்பது ஆடைக்கு தெளிவான வடிவமைப்பை தருகிறது.
அதற்கு இனையாக துப்பட்டாவும் அணிந்திருந்தார். அதுவும் அட்டகாசமான கைவண்ணம். இதற்கு இணையாக ஆபரணங்களிலும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. எமரால்டு மற்றும் கோல்டு நிறைந்த நகைகளை அணிந்திருந்தார். அதிக வேலைப்பாடுகள் கொண்ட நீளமான ஹெவி நெக்லஸ் , சோக்கர், நெற்றிச்சுட்டி , ஜிமிக்கி மற்றும் மோதிரங்கள் என அந்த நிகழ்ச்சியை தன் வசம் ஈர்த்துக்கொண்டார் ராதிகா.
அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அவரின் எதார்த்தமான மேக்கப்தான் ஒட்டுமொத்த அழகுக்கும் காரணம் எனலாம். ஆடைக்கு பொருத்தமான பிங்க் நிற லிப்ஸ்டிக், கண்களுக்கு மெருகேற்றும் ஐலைனர், சிவக்கும் கண்ணம் , எளிமையான ஐ ஷாடோவ் என பகட்டு இல்லாத மேக்கப்தான் அவரின் தோற்றத்திற்கு தனித்துவமாக இருந்தது. ஹேர் ஸ்டைல் கூட லூஸான பிண்ணல் பூக்களின் அலங்கரிப்புகளுடன் சில ஹேர் அக்சசரீஸ் பொருத்தியிருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.