
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானி தம்பதியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனந்த் அம்பானி என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் தான் ராதிகா மெர்ச்சென்ட் என்பவரை விரைவில் மணம் முடிக்கவுள்ளார். இருவரும் நேற்று பிரம்மாண்ட விழாவில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
இருவரின் நிச்சயதார்த்தமானது குடும்பத்தினர் நண்பர்கள் சூழ நேற்று மாலை 7 மணிக்கு துவங்கியது. குஜராத்தை சேர்ந்த இந்துக்கள் கடைபிடிக்கப்படும் கோல் தானா (கோல் தானா) மற்றும் சுனரி விதி (சுனாரி விதி) சடங்குகளுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் கோல் தனா என்பது நிச்சயதார்த்தத்திற்கு முன் கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு.
மனமகளின்குடும்பத்தினர் மனமகனின் வீட்டுக்கு பரிசுகள், இனிப்புகளுடன் வருபவர். பின்னர் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்வர். மோதிரம் மாற்றிக்கொண்டதற்கு பின் மணமக்கள் இருவரும் குடும்பத்தின் மூத்தவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவர்.
பின்னர் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் உள்ளிட்ட இருவரது குடும்பத்தினர் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெறவேண்டும் என கிருஷ்ண பகவானை வேண்டிக்கொண்டனர். பின்னர் நிச்சயதார்த்த நிகழ்வு நடக்கும் இடத்துக்கு சென்று, கணேஷ் பூஜையுடன் நிச்சயதார்த்தத்தை தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து திருமண நிச்சயத்தை குறிக்கும் லக்கின பத்திரிகை வாசிக்கப்பட்டது. பின்னர் பரிசுகளையும் இனிப்புகளையும் இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொண்டனர். பின்னர் நீதா அம்பானி தலைமையில் அம்பானி குடும்பத்தினர் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா நிச்சயதார்த்த நிகழ்வை அறிவித்தார். அதைத்தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இருவரும் குடும்பத்தின் மூத்தவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் ஆற்றல் சார்ந்த வணிகங்களை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். ராதிகா மெர்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் குழுமத்தின் இயக்குனராக உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: