
சென்னை: தனியார் பால் விலை உயர்வை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 5 வது தனியார் முறையாக பால் விலை உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 5 தனியார் பால் நிறுவனங்கள், பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன -இது கடந்த ஓராண்டில் 5-வது முறையாகும். சராசரியாக 70 நாட்களுக்கு ஒரு முறை தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.