
அத்துமீறிய மாணவர்
இதையடுத்து அபர்ணாவை எழுந்திரிக்குமாறு கூறிய அந்த மாணவர், அவர் தோள் மீது கை வைக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியான அபர்ணா, அவரிடம் இருந்து விலகியுள்ளார். ஆனாலும் விடாத அந்த மாணவர் அபர்ணாவை வலுக்கட்டாயமாக இழுக்க முயற்சித்து அத்துமீறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படத்தின் நாயகனான வினீத் சீனிவாசன் அந்த மாணவரை சத்தம் போட்டு விரட்டியுள்ளனர். மாணவனின் இந்த நடத்தையை அங்கிருந்த கல்லூரி நிர்வாகிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.
குவியும் கண்டனங்கள்

இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த மாணவரின் செயலை கண்டித்து வருகின்றனர். பொது வெளியில் ஒரு பெண்ணின் மீது கை வைப்பது சாதாரண விஷயமல்ல என்றும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகைகள் இதுபோன்ற சம்பவங்களை சந்திப்பது இது ஒன்று முதல் முறையல்ல என்றும் கூறி வருகின்றனர். அந்த மாணவரிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள முயன்ற அபர்ணாவின் செயல் பாராட்டுக்குரியது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
வடிவேலு: விக்கிப்பீடியாவில் என் தாய் குறித்து தவறான தகவல் உள்ளது… அழித்துவிடுங்கள்… வடிவேலு உருக்கம்!