
டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தின் 3ம் வழித் தடத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 45.8 கி.மீ. வழித்தடத்தில் பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு எல்லையில் மெட்ரோ திட்டம் அமைகிறது. பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆற்றில் CRZ எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மெட்ரோ திட்டம் அமைகிறது.