
நம் அன்றாட வாழ்வில் காபி, டீ, பால், ஜூஸ், இனிப்பு வகைகள் என பல வகைகளில் சர்க்கரையை பயன்படுத்தி வருகிறோம். அந்த சர்க்கரை நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது அல்ல, ஆனால் அதை அதிகப்படியாக எடுத்துக்கொள்வதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதை விட இயற்கையாக தயாரான சர்க்கரையை உட்கொள்வது சிறந்தது என பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தெரிவிக்கிறார்.
உதாரணமாக பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் இயற்கையாக சர்க்கரை உள்ளது. எனவே இந்த உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று நிச்சயமாக கூற முடியாது. ஆனால் ஜூஸ் வகைகள், கோக் வகைகள், சாக்லேட்கள், கேக்குகள், இனிப்பு சேர்க்கப்பட்ட தானியங்கள், ஜாம்கள், கெட்ச்அப், பிஸ்கட்கள் போன்ற பேக் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர்.
சர்க்கரை பற்றிய சில தகவல்கள் :
சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் இயற்கையான சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்ளலாம். அதாவது பழங்கள் அல்லது பால் பொருட்கள் போன்ற பொருட்கள் இதில் அடங்கும். அதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. எல்லா சர்க்கரையும் கெட்ட சர்க்கரை என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் என்னவென்றால், குறைந்த அளவு சர்க்கரையை சாப்பிட வேண்டும் என்பதாகும். அதாவது நீங்கள் ஐஸ்கிரீம் வகைகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதிக சர்க்கரை உட்கொள்வது இதய நோய், புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஆனால், ‘சர்க்கரை மற்றும் இறப்பு அபாயம் என்ஐஎச்-ஏஆர்பி உணவு மற்றும் சுகாதார ஆய்வில்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, மிதமான அளவில் சர்க்கரை சாப்பிடுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். சர்க்கரை உட்கொண்ட 350,000 பெரியவர்களுக்கு மரணம் ஏற்படும் அபாயத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆய்வு முடிவு செய்யப்பட்டது.
சிலர் அய்யோ சர்க்கரை நோய் வந்துவிட்டது வாழ்க்கையில் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என பலர் வலியுறுத்துவர். ஆனால் 2,000 கலோரிகள் உட்கொள்ளும் ஒரு வயது நபர் 50 கிராம் சர்க்கரையை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்க உணவு வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், பெண்கள் 25 கிராம் அல்லது 6 டீஸ்பூன் சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என்றும், ஆண்கள் தினமும் 36 கிராம் அல்லது 9 டீஸ்பூன் சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது.
சர்க்கரையை மாற்றுவதற்கு பதிலாக, மிதமாக எடுத்துக்கொள்ளுங்கள். 2017 ஆம் ஆண்டு கனடியன் மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, சுக்ரோலோஸ் போன்ற சர்க்கரை மாற்றீடுகளை உட்கொள்வது எடை இழப்புக்கு பதிலாக எடை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாற்றீடுகள் உயர் இரத்த அழுத்தம், வகை 2 நீரிழிவு, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: லோ சுகர் ஆகிட்டா உடனே என்ன சாப்பிட வேண்டும்..?
அடிக்கடி சர்க்கரை அதிகமாக பயன்படுத்தும் போது மூளையை தூண்டி ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக, சர்க்கரை அடிமையாதலுக்கான சான்றுகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், தெரியவந்துள்ளது. கூடுதல் சர்க்கரை உட்கொள்வது நரம்பியல் விளைவுகளை ஏற்படுத்தலாம். இது போதைப்பொருள் பயன்பாடு போன்றதாகக் கூட இருக்கலாம். எனவே சர்க்கரையை அளவோடு எடுத்துக்கொண்டு நலமோடு வாழ்வோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: