
2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக மும்பை நகரில் நேற்று (ஜனவரி 24) நிலவரப்படி ஒரு பொது பாதிப்பு கூட மும்பையில் பதிவாகவில்லை என பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்தனர். அதோடு நேற்றைய தினத்தை (ஜனவரி 25) கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிதி மூலதனமாக திகழும் மும்பை நகரை தொற்று வாட்டிவதைத்தது. அண்டை நாடான சீனாவில் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் இன்னொரு அலை ஏற்பட சாத்தியம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிய பாதிப்பு நகரின் மொத்த எண்ணிக்கையை 11,55,240ஆக உயர்த்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இறப்பு எண்ணிக்கையில் மாற்றமின்றி 19,747ஆக உள்ளதாக அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று அதிகரித்து 11,35,462-ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில், வைரஸில் இருந்து மீட்பு விகிதம் 8.3 சதவீதமாக உள்ளது. மும்பையில் இதுவரை 1,86,93,408 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 104 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 49 ஆயிரத்து 547 ஆக உள்ளது எனவும், தற்போது 1,92 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மறுபுறம், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,30,737ஆக நீண்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மலேசியா மற்றும் ஓமனில் இருந்து வந்த 2 பேர் உட்பட 10 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. 33 மாவட்டங்களில் பாதிப்பு எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்றால் நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: